கர்நாடகத்தில் பஸ்களில் இலவச பயணம் செல்லும் பெண்களுக்கு நற்செய்தி

பெங்களூரு, ஆக. 13: மாநில அரசின் சக்தி திட்டத்தின் கீழ் இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களில் ஸ்மார்ட் கார்டுகளை விநியோகிக்க அரசு தயாராகி வருகிறது. ஸ்மார்ட் கார்டு பெற்ற பிறகு பேருந்துகளில் ஆதார் அட்டை கொண்டு வரத் தேவையில்லை.
ஸ்மார்ட் கார்டுகளை பெங்களூரு ஒன், கிராம் ஒன், சேவா சிந்து மையங்களில் பெறலாம்.
ஸ்மார்ட் கார்டு பெறும்போது போலி ஆதார் கார்டு கிடைத்தால், சம்பந்தப்பட்டவர்களின் விண்ணப்பம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஸ்மார்ட் கார்டு அச்சிடப்பட்ட ஆவணமாக இருக்கும். மாதாந்திர பாஸ் போன்று இது இருக்காது. விண்ணப்பித்த உடனேயே வழங்கப்படும் பிரிண்ட் அவுட் ஸ்மார்ட் கார்டாகக் கருதப்படுகிறது.
சேவாசிந்து இணையதளத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும். ஆதார் அட்டையை ஆவணமாக கருதி, மாநில பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. பெங்களூரு ஒன், கிராம் ஒன், சேவா சிந்துசேவை மையத்திலேயே ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்படும்.
கர்நாடக‌ மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. ஆதார் அட்டையில் கர்நாடகத்தில் வசிக்கும் முகவரி மட்டுமே இருக்க வேண்டும். சக்தி திட்டத்திற்காக ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றினால் ஸ்மார்ட் கார்டு கிடைப்பதில் சந்தேகம் எனக் கூறப்படுகிறது.