கர்நாடகத்தில் புதிய மதுபான கடைகள் திறக்கும் திட்டம் இல்லை – முதல்வர் விளக்கம்

பெங்களூர், அக் 7- புதியதாக மதுபான கடைகள் திறக்கும் திட்டத்தை நல்லதுக்காக கைவிடுவதாக முதல்வர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் புதியதாக மதுபான கடைகள் திறக்க இருப்பதாக அவ்வப்போது வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது. கர்நாடக மாநில அரசின் ஐந்து உத்தரவாதங்களை நிறைவேற்ற நிதி நிலைமையை சமாளிக்க 3000 மற்றும் அதற்கு அதிகமானோர் வசிக்கும் கிராமங்களில் மதுபான விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தது. கலால் துறை அமைச்சர் திம்மாப்புரா மட்டுமே மதுபான விற்பனைக்கு புதிய லைசென்ஸ் வழங்குவதாக தெரிவித்திருந்தார். கிராம பகுதிகளில் மதுபானம் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்க படுவதை தடுக்கவே புதிய லைசென்ஸ் வழங்குவதாக அரசு யோசிக்கிறது என்றார். இதுகுறித்து சித்ரதுர்காவில் முதல்வர் சித்ராமையா கூறுகையில், கர்நாடக மாநில கலால் துறையினர்,
புதியதாக மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்காது. புதிய மதுபான கடைகள் திறக்கபட மாட்டாது. கடந்த செப்டம்பர் மாதம் கலால் துறை முன்னேற்றங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் அப்போது முதல்வர் தலைமையில் ஆலோசனை நடந்தது. அப்போது மாநிலம் முழுவதும் புதியதாக கடைகள் திறக்க 400 லைசென்ஸ்கள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தால் சட்ட விரோத கள்ள சந்தையில் மதுபானம் விற்பனைக்கு கடிவாளம் போட முடியும் என்று ஆலோசித்தனர். கள்ளச் சந்தை விற்பனையை தடுப்பதுடன் புதியதாக லைசென்ஸ் தருவதால் அரசுக்கு வருமானம் கூடும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புதிய மதுபான கடைகள் திறக்கும் திட்டத்திற்கு கிராமம், நகரப்பகுதிகளில் இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இதனை காரணம் காட்டி ஜேடிஎஸ், பிஜேபி ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்த தயாரானார்கள். பெண்கள் நலனுக்காக ஐந்து உத்தரவாதங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது அரசின் நோக்கம். இதற்கு நிதி பெருக்க இதனை ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இதற்கு காங்கிரஸ் எம் எல் ஏ கள் சிலர் கூட ஆதரவு தராமல் எதிர்ப்பு காட்டினர்.
பெண்கள் அமைப்பினர் பலர் மாநிலத்தில் பல இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர்.
எனவே அரசு மது விற்பனைக்கு புதியதாக லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை கைவிட்டனர். ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளாகவே புதிய லைசென்ஸ்கள் வழங்குவதை நிறுத்துவதையே அரசு கொள்கையாக கொண்டுள்ளது.