கர்நாடகத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

பெங்களூர், மார்ச் 11-
மாற்றப்பட்ட வாழ்க்கை முறை, மேற்கத்திய உணவு முறை ,உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாநிலத்தில் புதிய புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக, கிட்வாய் நினைவு அறக்கட்டளையின் பதிவேட்டின் படி கடந்த நான்கு ஆண்டுகளில்
72 ஆயிரத்து 956 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் கால்வாய் நிறுவனம், கல்வி ஆராய்ச்சி மற்றும் நோய் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளது.
ஹொம்பே கார்டன் நகரில் உள்ள இம்மருத்துவமனைக்கு தினமும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த அமைப்பு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடமாடும் வேன்கள் மூலம் ஆய்வு முகாம்களை நடத்துகிறது.
இதன் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கண்டறியப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதியதாக நோய் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகின்றன.
இந்த மருத்துவ மனையில் ஆண்டுதோறும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் 106 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உட்பட, 863 படுக்கைகள் உள்ளன. புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையில் தினமும் சராசரி 1,400 புற்று நோய்கள் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் பரிந்துரை அடிப்படையில் வந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தாமதமாக பதிவு செய்வதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.கித்வாய் நினைவு அறக்கட்டளையின் பதிவேட்டின் படி 50 சதவீத நோயாளிகள் மூன்றாம், நான்காம் கட்ட நிலைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கு வருகின்றார்கள். முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 14.3% பேர் மட்டுமே புற்றுநோயால் பாதிக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 294 பேர் இறந்துள்ளனர். ஆண்களுக்கு ப்ரோஸ் டேட் ,வாய், வயிறு, மற்றும் உணவு குழாய் புற்றுநோய்களில் அதிகமாகவும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை வாய் மற்றும் கருப்பை உள் ஏற்படும் புற்று நோய்களும் அதிகம். புற்றுநோய் சிகிச்சை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முன்கூட்டியே மருத்துவமனைகளில் சென்று பரிசோதனை செய்து கொண்டால் உயிருக்கு ஆபத்து இல்லை, தவிர்க்கலாம் என்று இதன் இயக்குனர் டாக்டர் சையத் அல்தாப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ம் ஆண்டில் 13 ஆயிரத்து 973 பேருக்கும்,
2021ம் ஆண்டில் 16,316 பேருக்கும்,
2022-ல் 21ஆயிரத்து 59 பேருக்கும்
2023 ம் ஆண்டில் 21,608 பேருக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவரம் தெரியவந்துள்ளது.