கர்நாடகத்தில் மழை குறைந்து கடும் காற்று வீசுகிறது

பெங்களூர், ஆக.3 –
கர்நாடக மாநிலத்தில் மலைப் பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளின் பல இடங்களில் மழையளவு குறைந்து வருகிறது.
மழை அளவு குறைந்து சூறாவளிக்காற்று வீசுகிறது இதனால் குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் உட்பட தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோலார் ,சிக்பல்லாபூர், சாம்ராஜ்நகர் ,மண்டியா, ராய்ச்சூர் ,பெல்லாரி ,ஆகிய இடங்களில் நீர்வரத்து இருக்கும். காலை 10 மணிக்கு மேல் வெயில் தாக்கம் இருக்கும்.
ஜூலை மாதத்தில் இயல்பை விட மூன்று சதவீதம் அதிகம் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
அதே ஜூன் மாதத்தில் 57 சதவீதம் மழை பெய்யவில்லை.
ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 453 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 468.7 மில்லி மீட்டர் மழை பெய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மாநிலம் முழுவதும் ஏழு சதவீதம் பற்றாக்குறை உள்ளது. ஜூன் மாதம் இரண்டு மாதங்களில் மழை பெய்யாததன் பின்னணி விவசாய நடவடிக்கைகள் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இன்று வடக்கு உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.பெங்களூர் 28 – 20 சிக்பல்லாபூர் 28- 19
கோலார் 31- 21
பெங்களூர் ரூரல் 28- 20 தும்கூர் 29- 21
சித்ரதுர்கா 28 -21 ஹாவேரி 27 -22 தாவண கரே 28- 12 ஹூப்ளி 26 -21தார்வாட் 25 – 21 கதக் 28 – 22 கொப்பல் 29 – 23 சிக்மகளூர் 24- 18 ஷிமோகா 26 -21 பீதர் 27- 22 கல்புர்ககி 30- 23 யாத்திரி 31- 24 பாகல் கோரட் 29- 23 விஜய புரா29- 22 பெல்லாரி 31- 23
ராய்ச்சூர் 31 – 24 மண்டியா 31 – 22 ராம்நகர் 31 – 21 மைசூர் 29 -21 சாம்ராஜ்நகர் 31- 21 மடிக்கேரி 21- 17 தென் கன்னடா 28 -24 உடுப்பி 28 -24 கார்வார் 28 -25 வட கன்னடா 24 -21