
பெங்களூர், செப்.1-
கர்நாடக மாநிலத்தில் மழையின்மையால், ஏற்கனவே கோடை வெயில் வாட்டி வதைத்துள்ளதால், மின் தேவை இருமடங்காக அதிகரித்துள்ளது.இதே நிலை நீடித்தால் மாநிலத்தில் மேலும் மின் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது.
கோடைக்கு ஆறு மாதத்திற்கு முன், மின் தேவை கணிசமாக அதிகரித்தது. பற்றாக்குறையை சமாளிக்க போராடி எரிசக்தித் துறை ஒரு யூனிட் ரூ.8 .45 க்கு வாங்கியது.
ஆனால் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஜூலை மாதத்தில் ஒரே நாளில் 8,000 மெகாவாட் மின் பயன்பாடு இருந்தது.
ஆகஸ்ட் மாதம் இறுதியில் இதன் தேவை 16 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது.
நடப்பாண்டு ஏப்ரலில் 16 ஆயிரத்து 180 மெகாவாட் மின் தேவை அதிகரித்தது.
வழக்கமாக பிப்ரவரி மாதம் இறுதிக்கு பின் மீண்டும் அதிக அளவு மின் பயன்பாடு தொடங்கும். ஆனால் ஆகஸ்ட் 30 ல் ஒரே நாளில் 16 ஆயிரத்து 932 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது.
தற்போது மாநிலத்தில் 8,738 மெகாவாட் மின் உற்பத்தி ஆதாரமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரம் மெகாவாட் மத்திய மின் கட்டம், மற்றும் பிற மாநிலங்களில், மற்றும் தனியார் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மீதமுள்ள பற்றாக்குறையை சமாளிக்க 40 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக எரிசக்தி துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விவசாயிகளின் பம்ப் செட்:மாநிலத்தில் 32 .55 லட்சம் விவசாயிகளின் பம்ப் செட்டுகள் உள்ளன
நல்ல மழை பெய்து ஏரிகள், நீர் நிலைகள் நிரம்பியதால், நீர் வரத்து அதிகம் இருக்கும்.
அப்போது, விவசாயிகளுக்கு 1,900 மெகாவாட் மின்சாரம்
ஒதுக்கப்படும். இம்முறை பருவ மழை காலத்தில் பம்ப் செட்டுகளுக்கு 3,400 மெகாவாட் மின் சக்தியை பயன்படுத்தியது. விளைநிலங்களில் பயிர்கள் கருகி வருவதால், ஏராளமான விவசாயிகள் மின்சாரம் வழங்கிய உடனே பயன்படுத்தி வருகின்றன. இதனால் மின்மாற்றிகள் மற்றும் கட்டங்கள் அழுத்தத்திற்கு தாங்க முடியாமல் திணறுகிறது.
சில இடங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
சூரிய ஒளி, காற்றாலை, நீர் மின் நிலையம் , மற்றும் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்ய பல்வேறு ஆதாரங்களில் 32,000 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது மாநிலத்திற்கு இவை வாய்ப்பு இருந்தபோதும் தற்போது இதுவரை உற்பத்தி திறன் ஒன்பதாயிரம் தாண்டவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி மின்சாரம் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது. மழையின்மையால் மின் தேவை அதிகரித்துள்ளது.