கர்நாடகத்தில் மின் உற்பத்தி பெரும் அளவில் பாதிப்பு

பெங்களூர் செப்டம்பர்5-
கர்நாடக மாநிலத்தில்
தொழில் நுட்ப கோளாறால்
மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெங்களூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மின் தேவையும், மின் சப்ளையும் பிரச்னை அதிகரித்துள்ளது. ஒன்றரை மணிநேரம் என்று இருந்தவை மூன்று மணி நேரமாக மின் தடை செய்யப் படுகிறது. மின் உற்பத்தி பாதிப்புக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பழுது பார்க்கும் பணிகளால் கோளாறு ஏற்பட்டது. மின் பழுது பார்க்க இரண்டு மூன்று நாட்கள் மின் தடை செய்யப் பட்டது. பழுது பார்த்த பிறகும் கூட மின் தடை செய்யப் பட்டது.
இதற்கு போதுமான மின் சப்ளை இல்லை. இதனால் மின் வழங்கல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பொம்மனஹள்ளி சர்ஜாபூர் ரோடு, மகாதேவபுரா ஆகிய பகுதிகளில் கூட மின்தடை ஏற்பட்டது.
கரும்பு உற்பத்தியாளர் சங்கப் பேரவைத் தலைவர் குருபரு சாந்தகுமார் கூறுகையில்.
எதிர்பார்த்த மழை பெய்ய தவறியது போர்வல்கள் மட்டுமே விவசாயிகளுக்கு உதவிகரமாக இருந்தது.
ஆனால் போர்வல்களுக்கு தேவையான மின் சப்ளை இல்லாததால் விளைப் பொருட்கள் பாதிப்பு ஏற்பட்டது.
நாள்தோறும் பகலும் இரவு நான்கு முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே மின் சப்ளை செய்யப்பட்டது. மின் சப்ளை நேரத்தில் விவசாயிகளுக்கு தொல்லை தான் ஏற்பட்டது.
ராய்ச்சூர் தெர்மல் பிளான்ட் ஒன்றில் நிலக்கரி பயன்படுத்துதலில் தடுமாற்றம் ஏற்பட்டது.
இதனால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது.ராய்ச்சூர் தெர்மல் பிளாண்ட் யூனிட் 8ல் பழுதுபார்த்தல் பணிகளால் உற்பத்தி பாதித்தது.
ராய்ச்சூர் தெர்மல் பிளாண்ட் யூனிட் 7ல் மின் உற்பத்திக்கு அனல் பிளேம் தவறியதால் மின்தடை ஏற்பட்டது. உடுப்பி பவர் கார்ப்பரேஷனில் கடல் நீர் ஈர்ப்பின் காரணமாகவும் அங்கு புழுதி சேர்ந்ததாலும், நிலக்கரி சப்ளை பாதித்ததாலும் மின் உற்பத்தி பாதித்தது.
நெய்வேலி தெர்மல் ஸ்டேஷனில் டர்பைன் பிரச்சனை மற்றும் நிலக்கரி பாதிப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் நியூக்ளியர் பிளான்டில் வால்வுகள் வேலை செய்யாததால் மின் உற்பத்தி பாதித்தது. என தொழில் நுட்ப காரணங்கள் தெரியவந்துள்ளது