கர்நாடகத்தில் மேலும் ஒரு வாரம் கனமழை

பெங்களூரு, ஜூன் 11- மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்திருப்பதுடன் இன்று முதல் மாநிலம் முழுக்க மழை தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது. இன்று முதல் ஒரு வார காலத்திற்கு கடலோர மாவட்டங்களான தக்ஷிண கன்னடா ,உடுப்பி , உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் மழை தீவிரமாகும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களான உத்தர கன்னடா தக்ஷிண கன்னடா மற்றும் உடுப்பியில் இன்று முதல் ஜூன் 13 வரை பலத்த மழை பெய்ய இருப்பதுடன் அதற்குபின்னரும் r மூன்று அல்லது நான்கு நாட்கள் மழை தொடர இருப்பதால் இப்பகுதிகளில் ஆரெஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இன்று முதல் மூன்று நாட்கள் கடலோரம் மற்றும் தென் உள் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பொழிய இருப்பதுடன் ஜூன் 14 அன்று மழை அதிகரிக்க இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரம் மற்றும் மலை நாடு பகுதிகளில் மழையால் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன. எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. . அந்த வகையில் தக்ஷிண கன்னடா , உடுப்பி , ராய்ச்சூர் , குடகு , சிக்கமகளூர் , மாவட்டங்களில் எஸ் டி ஆர் எப் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். வங்காளத்தில் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் மழையின் தீவிரம் அதிகமாயிருக்கும். கடலோரம் மட்டுமின்றி சிவமொக்க , சிக்கமகளூரு குடகு , ஹாசன் , பீதர் , கதக் , பெங்களூரு நகரம் பெங்களூரு கிராமந்தரம் , கலபுராகி , சித்ரதுர்கா ,கோலார் , துமகூரு ,கொப்பல் தாவணகெரே ஆகிய மாவட்டங்களிலும் இன்று முதல் அடுத்த ஒரு வார காலத்திற்கு மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது . அதனால் இம்மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மூன்றாவது வாரம் மழை மேலும் தீவிரமடையும். கர்நாடக கடலோரம் மற்றும் தென் உள்பகுதிகளில் இன்று சாதாரண மழை பெய்யும். இன்று முதல் ஜூன் 15 வரை கேரளாவிலும் அதிக மழை பெய்யும் இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.