கர்நாடகத்தில் மேலும் 5 நாள் கனமழை

பெங்களூர்: நவம்பர். 2 – வங்காள விரிகுடாவில் மேலடுக்கு சூறாவளி உருவாகியுள்ள நிலையில் பெங்களூர் உட்பட மாநிலம் முழுக்க அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. மாநிலத்தின் மலைநாடு , வடக்கு உள் மாவட்டங்கள் , கடலோர மாவட்டங்கள் , மற்றும் பெங்களூரு பகுதிகளில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நகரில் மீண்டும் கடந்த இரண்டு நாடகளாக மழை தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருப்பதுடன் இன்று பிற்பகலுக்கு பின்னர் மழை துவங்கும் வாய்ப்புகள் உள்ளன. இன்று மற்றும் நாளை அதிகளவில் மழை பெய்ய இருப்பதுடன் வானமும் அதிக மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்புகள் உள்ளது. பெங்களூரில் தாழ்வு பகுதிகள் , ராஜகால்வாய்களின் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் , மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சில நாடுகளாக ஓய்வு பெற்றிருந்த மழை நவம்பர் மாதத்தில் மீண்டும் துவங்க உள்ளது. இன்று முதல் நவம்பர் ஆறு வரை கடலோர மாவட்டங்கள் , தெற்கு உள்பகுதிகள் , வடக்கு உள்பகுதிகள் , மற்றும் பெங்களூரில் பலத்த மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. இதன் பின்னணினியில் பெங்களூர் , குடகு , சிவமொக்கா , கோலார் , சிக்கமகளூர் , உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . நகரில் நேற்று மாலை முதலே மழை துவங்கியுள்ள நிலையில் இன்று முதல் மழையின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. தும்கூர் , ராம்நகர் , பெங்களூர் நகரம் , பெங்களூர் கிராமந்தரம் , சிக்கபள்ளாபுரா , தக்ஷிண கன்னடா , உத்தர கன்னடா , உடுப்பி , சாமராஜ்நகர் , கோலார் , குடகு மற்றும் சிக்கமகளூர் மாவட்டங்களில் மழைகளுக்கான வாய்ப்புகள் இருக்கும் நிலையில் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3 அன்று மாநிலத்தின் உள் பகுதிகளில் பெருமளவில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்க பட்டுள்ளது.