கர்நாடகத்தில் மேலும்3 நாட்களுக்கு கனமழை

பெங்களூரு, அக். 21: அக்டோபர் 24-ம் தேதி வரை கர்நாடக‌த்தில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கர்நாடகத்தில் அண்மையில் சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஏற்கனவே நல்ல மழை பெய்து வருகிறது.வ்அடுத்த 3 நாட்களுக்கு கடலோரம், மலைப்பகுதி உள்ளிட்ட தென் உள்பகுதிகளில் மழை பெய்யும்.
வடக்கு உள்பகுதியில் லேசான மழை அல்லது வறண்ட நிலை காணப்படும்.உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். குடகு, ஹாசன், சிக்கமகளூரு, மைசூர், சாமராஜநகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மைசூரு, குடகு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிகிறது. இன்று மாலையில் அங்கு கனமழை பெய்யும் என கருத்துவதால் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமை வானம் மேகமூட்டமாக காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.
இந்த மாதம் முழுவதும் நல்ல மழை பெய்யும். கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதால், அக்டோபரில் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.