கர்நாடகத்தில் லாக்டவுன் இல்லை தொற்று கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை

பெங்களூரு, ஜன. 14 – மாநிலத்தில் கொரோனா தொற்றை தவிர்க்க லாக் டவுன் செய்யப்படும் என்ற வதந்திகளை மறுத்துள்ள சுகாதார மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே சுதாகர் லாக் டவுன் செய்யும் திட்டமே அரசிடம் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளார். நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் லாக் டவுன் வாயிலாக தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்பது சரியல்ல. மக்கள் கொரோனா நியமங்களை சரியாக பின்பற்றினாலே தொற்றை கட்டுப்படுத்த முடியயும் . நேற்று பிரதமர் மோதி அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் நடத்தி கொரோனாவை கட்டுப்படுத்த லாக் டவுன் மட்டுமே காரணமில்லை . மக்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அந்த வகையில் லாக் டவுன் செய்து தொற்றை கட்டுப்படுத்தும் எண்ணமே அரசுக்கு இல்லை. என்றார். தவிர பொருளாதார நஷ்டங்கள் ஏற்படியாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மோதி அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் லாக் டவுன் இல்லாமல் வேறு விதங்களில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுவோம். மக்கள் கூடுவதை தவிர்த்து கூட்டம் மற்றும் விழாக்களில் அதிக அளவில் மக்கள் சேர்வதை தவிர்த்தாலே லாக் டவுன் தேவையில்லை . லாக் டவுன் வாயிலாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை நான் ஒப்புக்கொள்வதில்லை. மாநிலத்தில் தொற்று அதிகரித்து வந்தாலும் மருத்துவமனைகளில் சேர்வோர் எண்னிக்கை மிகவும் குறைவாக 5 அல்லது 6 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. கொரோனவை கட்டுப்படுத்த மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் இம்மாத இறுதி வரையில் தொடரும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அந்த வகையில் வார இறுதி ஊரடங்கு , மற்றும் இரவு ஊரடங்கு தவிர 50;50 ஆகிய நியமங்கள் தொடர உள்ளன. மாநிலத்தின் பல இடங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. மக்கள் அலட்சியம் கட்டமால் சோதனைக்கு உட்பட வேண்டும். தாங்களாகவே முன்வந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யாரும் தொற்றை அலட்சியப்படுத்தக்கூடாது. கட்டாயமாக முக மாஸ்குகளை அணிய வேண்டும். 2வது டோஸ் தடுப்பூசி போடாமல் இருப்போர் உடனே அதை போட்டாக வேண்டும். தவிர மூன்றாவது பூஸ்டர் டோஸுக்கு யாரெல்லாம் தகுதியானவர்களோ அவர்கள் அதை போட்டுக்கொண்டாக வேண்டும். மாநிலத்தில் தற்போது அதிகரித்து வரும் தொற்று இன்னமும் உச்சத்தை எட்ட வில்லை. ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் அதிகப்படியானான் அளவை இது எட்டும். தவிர பிப்ரவரி நான்காவது வாரத்தில் தொற்று படிப்படியாக குறையும். மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கை அமுல் படுத்தியும் இன்னும் தொற்று குறைய வில்லை. கடந்த வாரத்தில் இருந்துதான் வார இறுதி ஊரடங்கை நடைமுறை படுத்தியுள்ளோம். 7 நாட்களில் தொற்று குறைந்து விடாது. கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது 14 நாடகள் சங்கலி இருந்தது. இந்த அலையில் தற்போது சற்று குறைவாக உள்ளது. இந்த தொற்று 5 அல்லது 6 சதவிகித வேகமாக பரவி வருகிறது. இன்னும் சில நாட்கள் கழிந்த பின்னர் தான் வார இறுதி ஊரடங்கின் பயன்கள் தெரிய வரும்.மக்கள் தடுப்பூசிகளை போட்டு கொள்வதுடன் கொரோனா நியமங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் இவ்வாறு சுகாதார துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்தார்.