கர்நாடகத்தில் வரும்6ம் தேதி வரை கனமழை பெய்யும்

பெங்களூர், அக்.3-
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பல மாவட்டங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மழை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் அக்டோபர் 6 ம் தேதி வரை கனமழை பெய்யும். கர்நாடகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வட கன்னடா, தென் கன்னடா,
பெல்காம், சிக்மகளூர், பாகல் கோட், குடகு ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 3ம் தேதி கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 6 ம் தேதி வரை பெங்களூரு நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உட்பட வட கர்நாடக மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.
மழை பெய்வதால் பாதிப்பில் உள்ள விவசாயிகள் வறட்சி அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என எதிர்பார்க்கப்
படுகிறது.
வங்காள விரிகுடா, அரபிக் கடலில், தெற்கு பகுதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களில் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.