கர்நாடகத்தில் விபத்துகளை தடுக்க சாலை வடிவமைப்பு சரி செய்ய‌ வலியுறுத்தல்

பெங்களூரு, நவ. 25: கர்நாடகாவில் தினமும் 95 சாலை விபத்துகளும், 27 விபத்து மரணங்களும் நிகழ்வதைச் சுட்டிக்காட்டி, பொது விவகார அறக்கட்டளை மற்றும் நுகர்வோர் ஒற்றுமை மற்றும் அறக்கட்டளை சங்கம் (CUTS) சாலைப் பாதுகாப்பில் கொள்கை வாகுப்பத‌ற்கான பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பாடு செய்துள்ளது.கலந்துரையாடலின் போது, ​​சாலை பாதுகாப்பு, அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சாலைகள் மற்றும் சந்திப்புகளில் உள்ள வடிவமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வது குறித்து பேசினர்.2021 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் சாலை விபத்துகளில் 10,038 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆண்டுதோரும் அதிகரிக்கும் விபத்து விகிதம் 1.5% ஆக இருந்தது. காயங்கள் மற்றும் இறப்புகள் முறையே 3.1% மற்றும் 3.57% அதிகரித்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,487 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில நெடுஞ்சாலைகளில் 2,777 பேர் உயிரிழந்துள்ளனர்.டபள்யூஆர் ஐயின் மூத்த திட்ட அதிகாரி சேத்தன் சோடே, வடிவமைப்பு தலையீடுகளின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். பரந்த இடைவெளிகள், நுழைவுப் பகுதிகள் மற்றும் நடைபாதைகள் போன்ற அம்சங்களைச் ஆராய்வது சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்கும். சாலை விபத்துக்களால் பெங்களூரு ஆண்டுதோறும் 650 உயிர்களை இழக்கிறது என்ற ஆபத்தான புள்ளிவிவரத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
கர்நாடகாவில் சாலை விபத்து மரணங்களுக்கு அதிவேகமே முக்கிய காரணமாக இருந்தாலும், ஹெல்மெட் அணியாமல் செல்வதால், பல வாகன ஓட்டிகள் உயிரிழக்க நேரிடுகிறது. ஹெல்மெட் ஒரு பயனுள்ள பாதுகாப்பு கருவி பலர் உணர மறுப்பது வேதனை அளிக்கிறது.
98,021 வாகன ஓட்டிகள் கணக்கெடுக்கப்பட்டனர். அதில் 44.3% பேர் முழு ஹெல்மெட்டைப் பயன்படுத்துகின்றனர், 21.4% பேர் அரை ஹெல்மெட் அணிந்துள்ளனர், 26.7% பேர் தொப்பி ஹெல்மெட்களை நம்பியிருந்தனர்.பொது விவகார அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் அன்னபூர்ணா ரவிச்சந்தர், சாலை பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார். சாலை கேமராக்கள், சட்ட விதிகள் மற்றும் தவறான சாலை வடிவமைப்பை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள‌ வேண்டும் என்றார்.