கர்நாடகத்தில் விரைவில் மதுபானங்கள் விலை உயரும்

பெங்களூர் : மே. 14 – மதுபானங்களின் விலையை உயர்த்த அரசு திரைமறைவில் திட்டமிட்டுவருவதுடன் பாராளுமன்ற தேர்தல்களுக்கு பின்னர் மது பிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஐந்து உத்தரவாத திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது மாநில அரசுக்கு சவாலாக உள்ளது. இலவச உத்தரவாத திட்டங்களுக்கு பொருளாதாரத்தை ஈட்ட தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ள அரசு இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது (ஐ எம் எல் ) வகைகளின் விலைகளை உயர்த்த முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு , ஆந்திரபிரதேசம் , தெலுங்கானா , மஹாராஷ்டிரா , கேரளா உட்பட வெளி மாநிலங்களில் ஒப்பிடும்போது கர்நாடகாவில் மது விலைகள் தற்போது குறைவாக உள்ளது. மாநிலத்தில் செமி பிரீமியம் மற்றும் பிரீமியம் வெளிநாட்டு மதுபானங்களை ஒப்பிடும்போது மது விலைகள் உயர்த்தவேண்டிவருகிறது. காலால் துறை வாயிலாக அரசு கருவூலத்திற்கு வரும் வருமானத்தில் மது பானங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாநிலத்தில் மது பான பிராண்டுகளின் விலைகள் 18 ஸ்லாப்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்து வரையிலான ஸ்லாப்களின் மது பான விற்பனையால்75 சதவிகிதம் வருவாய் கிடைக்கிறது. இதனால் 12 வரையிலான ஸ்லாப் வரையிலான செமி பிரீமியம் மது பானங்களால் 20 சதவிகிதம் மற்றும் 13 முதல் 18 ஸ்லாப் வரையிலான பிரீமியம் வெளிநாட்டு வகை மது பானங்களால் 5 சதவிகிதம் வருவாய் கிடைத்து வருகிறது. வருவாய் கணக்கில் அரசு இரண்டு முதல் ஐந்தாவது ஸ்லாப் வரையிலான மது பானங்களின் விலையை 7 முதல் 8 சதவிகிதம் உயர்த்த உள்ளது. மாநிலத்தில் 2023ல் ஜூலை மாதம் வெளிநாட்டு மதுவகைகளின் விலை உயர்த்தப்பட்டது . அதற்க்கு பின்னர் இது வரை விலையேற்றம் இருக்கவில்லை. அண்டை மாநிலங்களின் மது பானங்களின் விலைகேற்ப கர்நாடகாவிலும் வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை உயர்த்த அரசு நிதிஅறிக்கையிலேயே தெரிவித்திருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தல்கள் இருந்த நிலையில் விலையேற்றம் நடக்க வில்லை. தேர்தல்கள் முடிந்த பின்னர் வெளிநாட்டு மது வகைகளின் விலை உயர்த்தப்பட உள்ளதாத கலால் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளி மாநிலங்களின் மது விலைகள் சராசரியை கொண்டு கர்நாடகத்தில் எந்த ஸ்லாப்களின் மது விலைகள் குறைவாக உள்ளதோ அத்தகைய மது பானங்களின் விலை உயர்த்தப்படும். 180 மில்லி லிட்டர் பாட்டில்களை கணக்கில் எடுத்து கணக்கு போடுவதென்றால் முதல் ஸ்லாப் தற்போதுள்ள ரூபாய் 63.14 என்றே இருக்கும் எந்த விலை உயர்வும் இல்லை. இரண்டாவது ஸ்லாப் தற்போது 80 ரூபாய் இருப்பது ஐந்து ரூபாய் உயர்த்தப்படும். மூன்றாவது ஸ்லாப் தற்போதுள்ள 99.50 லிருந்து 105ஆக உயர்த்தப்படும் . நான்காவது ஸ்லாப் தற்போதுள்ள 122 லிருந்து 130ஆகா உயர்த்தப்படும். சில மது வகைகள் அண்டைய மாநிலங்களில் கர்நாடகாவை விட குறைவாக உள்ளது. இத்தகைய மது வகைகளின் விற்பனையை உயர்த்தும் நோக்கில் இவற்றின் விலையை அரசு குறைக்க உள்ளது. அதனால் 12வாத ஸ்லாப் வரையிலான செமி பிரீமியம் மது பானங்களின் விலையில் 10 முதல் 12 சதவிகிதம் வரையிலும் 12 முதல் 18 வரையிலான ஸ்லாப் வரையிலான பிரீமியம் மது வகைகளை 12 முதல் 15 சதவிகிதம் குறைக்கும் வாய்ப்புகள் உள்ளது. வெளி மாநிலங்களின் மது விலைகளை வைத்து நம் மாநிலத்திலும் விலைகள் நிர்ணயிக்கப்படும். 2023 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு மூன்று முறை பீர் விலையை உயர்த்தியுள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே பீர் மீது 20 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டது. பின்னர் பீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகரிக்கும் உற்பத்தி செலவை சரிசெய்ய பாட்டில் ஒன்றின்மீது 10 ருபாய் வரை அதிகரித்தன. அதன் பின்னர் அரசு பிப்ரவரி ஒன்று முதல் நடைமுறைக்கு வருமாறு பீர் மீது கூடுதல் காலால் வரியை 185லிருந்து 195ஆக உயர்த்தியது. இந்த வரி உயர்வால் பீர் விலைகள் 8 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை உயர்ந்தன. இதனால் கடந்த ஏழெட்டு மாதங்களில் பீர் விலை பாட்டில் பாட்டில் ஒன்றிற்கு 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது