கர்நாடகத்தில் விரைவில் 436 நம்ம க்ளினிக்

பெங்களூர்: ஆகஸ்ட். 5 – மாநிலத்தில் சுமார் 436 இடங்களில் ‘நம்ம க்ளினிக்குகள் ‘விரைவில் துவக்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் மருத்துவ கல்வி துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தெரிவித்துள்ளார் . மாநில சுகாதார வசதிகளில் புதிய உற்சாகம் கிடைக்க உள்ளது . மாநில தலைநகர் பெங்களூர் உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நம்ம க்ளினிக் திட்ட பணிகள் துவங்க உள்ளது. ஆட்சி மற்றும் அபிவிருத்தியில் மக்களின் முழு ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கிறது . அரசின் மற்றும் சுகாதார துறையின் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் கவர்ச்சியான சின்னம் வரைய வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் சின்னத்தை வரைந்தவர்களுக்கு முதல்வர் மற்றும் சுகாதார துறை அமைச்சர்களிடமிருந்து சிறப்பான கௌரவம் கிடைக்க உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.