கர்நாடகத்தில் வெயில் உக்கிரம்மேலும் தீவிரம் – வறட்சி அதிகரிக்கும்

பெங்களூர், மார்ச் 26-
கர்நாடக மாநிலத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் வெயிலும் வறண்ட வானிலையும் தீவிரமடையும். வறட்சி அதிகரிக்கும்.
வெப்பநிலை அடுத்த ஏப்ரல் 15 வரை அதிகமாக இருப்பதால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.அதனை கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் உள்ளிட்ட வறட்சி துன்பங்களை குறைக்கும் முயற்சிகளை மாநில தலைமை செயலாளர் தலைமையிலான ஆய்வு குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சரியான மதிப்பீட்டின்படி ஏப்ரல் மாதத்திற்கு முன் இரண்டு வாரங்கள் பரந்த வெப்பநிலை இருக்கும்.
இந்த காலகட்டத்தில் சூரிய வெப்பம் மற்றும் வறட்சி தீவிரம் அடையும். உகாதியை ஒட்டிய நாட்கள் மாநிலத்திற்கு ஒரு ‘போர்’ சூழ்நிலை தான். மற்றும் நெருக்கடி தீவிரமடையும்.
2 , 3 வாரங்களுக்கு பிறகு பருவம் மழை இருக்கும். அதன் பின் நிலைமை கட்டுக்குள் வரும் என்று
கே எஸ் என் டி எம் சி என்ற இயற்கை பேரிடர் மேலாண்மை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் அழுத்தம் ஒருபுறம் இருந்தாலும் கோடை வறட்சியை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராகவே உள்ளது.
இந்நிலையில் தெளிவான மதிப்பீட்டின் தயாரிக்கப்பட்ட வருவாய்த் துறையயை பேரிடர் மேலாண்மை பிரிவு, மாநில முழுவதும் நிலைமையை கண்காணித்து வருகிறது.தேர்தல் நடந்து வரும் நிலையில், மாவட்ட கலெக்டர்கள் ஜில்லா பஞ்சாயத்து செயலாளர்கள், ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தி வறட்சியை போக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.தேர்தல் பணிகள் நடந்து வருவதால் வறட்சி பணிகளுக்கு முன்னுரிமை தருவதில் பின் வாங்கக்கூடாது.புகார்கள் அடிப்படையில் நிலைமையை தொடர்ந்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்து வருகின்றனர்.இம்மாதம் இரண்டாவது வாரம் வரை 675 கிராமங்களில் 20 நகரப் பகுதிகளில் மட்டுமே குடிநீர் பிரச்சனை மோசமாக இருந்தது.ஆனால், அடுத்த வாரங்களில் கிராமங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் 7,408 கிராமங்களில் கடும் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கிராம பஞ்சாயத்து போர்வல்களை வாடகைக்கு எடுத்து, தண்ணீர் சப்ளை செய்ய டெண்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது.இதற்காக மாநில பேரிடர் நிர்வாண நிதி ஒதுக்கீடு செய்து வருவதாக அரசு உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.குடிநீர் தவிற மற்ற நோக்கங்களுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஹேமாவதி அணையில் தண்ரை தவறாக பயன்படுத்துவதாக தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 46 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் போர்வெல்கள் சரி செய்ய பணிகள் நடந்து வருகிறது.மேலாண்மை குழு முடிவின்படி ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்கு பிறகு நிலைமை முடிவுக்கு வரும். பருவமழை முன்கூட்டியே பெய்யும். மழை மாநிலத்திற்கு ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.வழக்கமாக ஒன்பது மில்லி மீட்டர் மழை பெய்யும் .ஆனால் இம்முறை பத்து மில்லி மீட்டர் கோடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.