கர்நாடகத்தில் 10ம் தேதி முதல் 10 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல்


பெங்களூரு, ஏப். 8- கர்நாடக மாநிலத்தில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சனிக்கிழமை இரவு முதல் 10 நாட்களுக்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு இன்று அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து நோய்த்தொற்று விகிதம் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
.இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்தினார். இதில் காணொளி காட்சி மூலம் முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு முதல்வர் எடியூரப்பா இந்த அறிவிப்பை வெளியிட்டார். கர்நாடக
மாநிலத்தின் 7 மாவட்டங்களில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூர் நகரம் தும்கூர் மங்களூர் உடுப்பி மணிப்பால் குல்பர்கா மைசூர் பீதர் நகரங்களில் இரவு ஊரடங்கு அமல் படுத்தப்படும.
அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் இரவில் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
மக்கள் முககவசம் அணிந்து கோவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். என்றும் முதல்வர் தெரிவித்தார்.