கர்நாடகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூர், செப் 28-
கர்நாடக மாநிலத்தில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால், மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வடக்கு உள் மாவட்டங்களில் மற்றும்
தெற்கு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வழக்கமான மழை பெய்ய வேண்டியது தவறியது. அது மீண்டு வருவதற்கான அறிகுறிகள் இப்போது தென்படுகிறது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களான உடுப்பி, வட கன்னடா, தென் கன்னடா மாவட்டங்களில் செப்டம்பர் 29 இன் மழை பெய்ய உள்ளது. எனவே நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, வடமாவட்டம், தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய இருப்பதால் அங்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராய்ச்சூர், கதக், கொப்பால், பாகல்கோட், பெல்காம், ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
அதுமட்டுமின்றி பெல்லாரி சித்ரதுர்கா தாவணக்கரே மாவட்டங்களில் 30ம் தேதி நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இங்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெல்காம், தார்வாட், கதக், கொப்பல், பெல்லாரி ,விஜயநகர், பகுதிகளில் அதிக மழை பெய்யும். இங்கு 90 மில்லி மீட்டர் முதல் 150 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கோலாரில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் மழை பெய்யாததால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.நேற்று இரவு பெய்த மழையால், அங்கு பலத்த காற்று வீசியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.மலைப்பகுதிகளான சிவமோகா, சிக்க மகளூர், ஹாசன் மேற்குப் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.குடகு பகுதியில் 175 மி.மீ. முதல் 250 மி.மீ., வரை மழை பெய்ய எதிர்பார்ப்பு உள்ளது.கடந்த ஜூன் 1 முதல் தற்போது வரை வடக்கு உள் மாவட்டங்களில் 19 சதவீதம் மழையளவு பற்றாக்குறை உள்ளது. தெற்கு உள் மாவட்டங்களில் 27 சதவீதம் மழை பற்றாக்குறை இருந்து வருகிறது.