கர்நாடகத்தில் 14ம் தேதி வரை கனமழை

பெங்களூர்: நவம்பர். 12 – வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றுமண்டல தாழ்வு பகுதியால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இம்மாதம் 14 வரை பெரும் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் மாநிலத்தின் தெற்கு உட்பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது . பெங்களூரிலும் நேற்று இரவு முதலே மழை தூறல்கள் தொடர்ந்து இந்த நேரம் வரை பெய்துகொண்டிருக்கும் நிலையில் மக்கள் குளிரால் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இந்த மழை தூறல்களால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது . காற்று தாழ்வு மண்டலத்தால் பெங்களூர் உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் கனத்த மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. மாநிலத்தின் வடக்கு உட்பகுதிகள் , கடலோர மாவட்டங்கள் , ஆகிய இடங்களில் சாதாரண மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு உட்பகுதிகளில் கனத்த மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பின் பருவ மழை சுறுசுறுப்படைந்துள்ள நிலையில் மாநிலத்தின் பல மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மொத்தம் எட்டு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு உட்பகுதியில் பல மாவட்டங்களில் நவம்பர் 13 மற்றும் 14 அன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெங்களூர் , சாமராஜ்நகர் , குடகு ம் மண்டியா , மைசூர் , ஹாசன் , ராம்நகர் , துமகூரு , மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.