கர்நாடகத்தில் 17ம் தேதி ஒரே நாளில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி

பெங்களூர், செப். 15- கர்நாடகாவில் வரும் 17ஆம் தேதி, ஒரே நாளில் 30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் “சிறப்பு தடுப்பூசி முகாமை” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்புர்கியில் முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைக்கிறார். கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம், வரும் 17ல் நடைபெற உள்ளது. ஆரம்ப சுகாதார மையங்கள் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், குடிசைவாழ் பகுதிகள், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், என, 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்கான தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கர்நாடகாவுக்கு வழங்கியுள்ளது அனைவருமே குரல் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் மூன்றாம் அலையை தடுக்க முடியும் என்று, அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து பெங்களூரு விதான் சவுதாவில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். எனவே பொதுமக்களுக்கு இப்போதிலிருந்தே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்தவேண்டும் என்றும், சிறப்பு முகாமுக்கு தேவையான ஊழியர்கள் ஏற்பாடு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். அன்றைய தினமும் கல்புர்கியில் சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமை முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைக்கிறார்.