கர்நாடகத்தில் 17 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச் 21- ம
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் கர்நாடகத்தில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் உள்பட நாடு முழுவதும் 57 பேருக்கு டிக்கெட் வழங்கி காங்கிரஸ் கட்சியின் 3வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதேசமயம் சுர்பூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த தொகுதிக்கு ராஜா வெங்கடேஷ் நாயக்காவுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. 17 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் 5 பெண் வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜி. குமார் நாயக்கிற்கு ராய்ச்சூர் மக்களவைத் தொகுதியில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகள் சௌமியா ரெட்டிக்கு பெங்களூரு தெற்கு தொகுதியிலும், லஷ்மி ஹெப்பால்கரின் மகன் மிருணாள் பெல்காமிலும், சதீஷ் ஜாரகிஹோலியின் மகள் பிரியங்காவுக்கு சிக்கோடியிலும், இஸ்சராகந்த்ரேவின் மகன் சாகர் காந்த்ரேவுக்கு பிதார் தொகுதியிலும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனின் மனைவி பிரபாவுக்கு தாவங்கரே தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
17 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் விபரம் வருமாறு

 • பெங்களூர் வடக்கு- பேராசிரியர் ராஜீவ் கவுடா
 • பெங்களூர் சென்ட்ரல்- மன்சூர் அலி கான்
  பெங்களூர் தெற்கு – சௌமியா ரெட்டி
 • உத்தர கன்னடம் – அஞ்சலி நிம்பல்கர்
 • பாகல்கோட் – சம்யுக்தா பாட்டீல்
 • தாவங்கரே- பிரபா மல்லிகார்ஜுன்
 • குல்பகா: ராதா கிருஷ்ணா
 • ராய்ச்சூர் – ஜி. குமார் நாயக்
 • பிதர் – சாகர் காந்த்ரே
 • கொப்பல்- கே. ராஜசேகர் பசவராஜா ஹிட்னல்
 • தரவாடா- வினோத் அசோக்
 • உடுப்பி-சிக்கமகளூரு: ஜெயபிரகாஷ் ஹெக்டே
 • தென் கன்னடம்- பத்மராஜ்
 • சித்ரதுர்கா: சந்திரலக்ஷன்
 • மைசூர் – லக்ஷன்
 • சிக்கொடி- பிரியங்கா ஜாரகிஹோலி
 • பெல்கானி- மிருணாள் ரவீந்திர ஹெப்பல்கர்
  அவருக்கு டிகே கொடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏழு பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று பதினேழு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.