கர்நாடகத்தில் 18ம் தேதி வரை கனமழை

பெங்களூர், செப். 15- கர்நாடக மாநிலத்தில் வரும் செப்டம்பர் 18 வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் வட கர்நாடகாவில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ,பெங்களூரில் இரவு நேரங்களில் கன மழை பெய்யும் என இந்த வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு உள்நாடு, மற்றும் மலைப் பாங்கான பகுதிகளில் மேகமூட்டத்துடன் வானிலை நிலவும்.
வடக்கு உள்பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. பெங்களூரில் காலையில் வெயில் அதிக அளவு இருந்தாலும், மாலையில் முதல் கன மழை பெய்யும். அதனால் ஊழியர்கள் தங்கள் பணிகளை முடித்துக் கொண்டு வீடுகளுக்கு விரைந்து செல்வதே நல்லது .
செப்டம்பர் 18 வரை பெங்களூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் வருணா புயல் வீசும் என மாவட்டங்களில் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தார்வாட், கதக், ஹாவேரி, பாகல்கோட் ,பெல்காம், விஜயபுரா, யாத்கிர், கொப்பால் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும்.
பல மாவட்டங்களில் விவசாயிகள் மழை பெய்யாததால் வருத்தத்தில் இருந்தனர். மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.