கர்நாடகத்தில் 20 தொகுதிகளை கைப்பற்ற பிஜேபி தீவிரம்

பெங்களூரு, பிப்.3-
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது பிஜேபி தலைவர்களின் ஆசை.
எடியூரப்பா மற்றும் அவரது மகன், விஜயேந்திராவும், இதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருந்து நீக்கப்பட்ட நேரத்தில், கட்சியின் தேசிய அமைப்பு செயலாளர் பி. எல். சந்தோஷ், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஆகியோர் களின் எண்ணங்கள் ஈடேறின.சட்டப்பேரவை தலைமை கொறடா பதவியைப் பெற துடித்த விஜேந்திராவுக்கு மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி, அவருக்கு மாநில பிஜேபி தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பை ஊஞ்சல் பலகையாக பயன்படுத்தி கொண்ட விஜேந்திரா, தனது அதிகாரத்தையும் தந்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி கட்சி அமைப்பை கைப்பற்றினார். அப்பா, மகன் ஆகியோரின் கீழே கட்சி நடவடிக்கை எல்லாம் நடக்க ஆரம்பித்தது.
கடந்த காலத்தில் ஆட்சியைப் பிடித்தவர்கள், நாளுக்கு நாள் திரைக்குப் பின்னால் நகர்வதுதான் தற்போதைய நிகழ்வு. மாநிலங்களவைத் தேர்தலில் புதிய சோதனைக்கு தயாராக இருந்த பி.எல். சந்தோஷ் பிரகலாத் ஜோஷி,
ஆகியோருக்கு பலன் கிடைக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், “கர்நாடக தொடர்பாக ஆலோசனை நடத்தி அறிவுறுத்தும் மற்றும் முடிவு எடுக்கும் பொறுப்புகளில் இருந்துசந்தோஷ், பிரகலாத் ஜோஷி ஆகிய இருவரையும் விடுவித்துள்ளனர்” என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019 ன் லோக்சபா தேர்தலின் போது, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பிஜேபி வெற்றி பெற்றது.
எடியூரப்பா நாற்காலியில் இருந்து வெளியேற்றபின் பிறகு, உண்மையில் அவரை மூலையில் தள்ளி விட்டனர்.
கட்சி அமைப்புக்காக பலமுறை மாநில முழுவதும் சுற்றுப்பயணம் செய்தும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால், எடியூரப்பா மௌனம் சாதித்தார்.
சட்டசபை தேர்தலுக்கு கவுண்ட் டவுன் துவங்கிய நிலையில் மீண்டும் எடியூரப்பாவுக்கு சற்று முன் ஜாமின் கிடைத்தது. ஆனால், அது பலன் அளிக்கவில்லை.
அவரை ஒதுக்கி வைத்ததால், லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என கட்சி தலைவர்கள் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எடியூரப்பா அவரது மகன் விஜேந்திரா ஆகியோருக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளனர். இதன் பலனாகத்தான் ஜெகதீஸ் ஷட்டரை, மீண்டும் பிஜேபிக்கு கொண்டுவர முதல் வேட்டை வெற்றி பெற்றது.
ஜெகதீஷ் ஷட்டர் திரும்பி வர விடாமல் தடுக்க பிரகலாத் ஜோஷி கடைசிவரை தனது சொந்த வழியில் முயற்சித்தார். அதன் பயன் அளிக்கவில்லை.
எடியூரப்பாவின் பதவி விலகல், இழப்பு, மற்றும் அவை இப்போது கொண்டு வருவதால் ஏற்படும் நன்மைகள் உணர்ந்துள்ளனர். எடியூரப்பாவை சமாதானம் படுத்திய போது, மூத்தவர்கள் ஒப்புக்கொண்டனர். அதேபோல சந்தோஷ் ஜோஷியால் கட்சியை விட்டு வெளியே செல்ல காரணமாக இருந்தவர்கள் அழைக்கப்பட்டனர்.
ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண சவுதி, கட்சியில் இருந்து வெளியே ஏறியதால் பிஜேபி லிங்காயத்துகளுக்கு எதிராக குறை கூறப் பட்டது.அதிலிருந்து விடுபட பிஜேபி ஆதரவாக இருந்த லிங்காயத்து வாக்குகள் மீண்டும் பெற விஜயேந்திரா முயற்சித்து வருகிறார்.
எடியூரப்பாவை பின்னுக்கு தள்ள பிரகலாத் ஜோசியும் சந்தோஷ் கூட்டணியும் வெற்றி பெற்றது.எடியூரப்பா எதிர்ப்பால் அடையாளம் காணப்பட்ட பலர் திடீரென குழு மாறினார்கள். ஆபரேஷன் கமலா காங்கிரஸ் ஜேடிஸிலிருந்து வந்தவர்கள் சந்தோஷை அணுகி சீட் பெற முயற்சித்தனர்.
ஆனால் அவர்களுக்கு சீட் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக வட்டார தகவல் தெரிவிக்கிறது.சட்டசபை தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதற்கு பழிவாங்க திட்டமிட்டுள்ள தார்வாட் தொகுதியில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டர் முடிவு செய்துள்ளார்.கட்சி தலைவர், சட்டசபை தலைவர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், என பணிபுரிந்த ஷெட்டருக்கு சட்டசபை தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது.தற்போது எம்எல்ஏவாக உள்ள மகேஷ் தெங்கன காயி என்பவருக்கு சீட் கொடுக்க இப்படி செய்ததாக ஷெட்டர் குற்றம் சாட்டியிருந்தார்.கட்சியை விட்டு விலகினார். இவரை ஓட்டலில் திரும்ப அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, ஷெட்டருக்கு தார்வாட் லோக்சபா சீட் வழங்க வேண்டும் என்பது மட்டுமே பேசப்பட்டது. அதற்கு உறுதி அளிக்கப்பட்ட பின்னர், அவமானப்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக தாம் லோக் சபா தொகுதியில் போட்டியிட போவதாக சவால் விட்டுள்ளார்.