கர்நாடகத்தில் 27ம் தேதி வரை கனமழை

பெங்களூர், செப். 20- பெங்களூர் நகரம், பெங்களூர் ரூரல், சித்ரதுர்கா, தாவணகெரே, சாம்ராஜ்நகர், சிக்கபல்லாப்பூர், ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 27ம் தேதி வரை நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 195 தாலுகாக்களில் வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின்றி விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 27ம் தேதி வரை மாநிலத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களான உடுப்பி, வட கன்னடா, தென் கன்னடா, ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 27 வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் சிட்டி, பெங்களூர் ரூரல் சித்ர துர்கா, தாவணகெரே, சாம்ராஜ்நகர், சிக்கபல்லாப்பூர், ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இக்கால கட்டத்தில் தார்வாட், கொப்பல், கதக், பெல்காம், ஹாவேரி மாவட்டங்களிலும் மழை பெய்யும் .
இது தவிர மைசூர், மண்டியா, தும்கூர், குடகு ஹாசன், பெல்லாரி, கோலார், மாவட்டங்களிலும் ஒரு வாரத்திற்கு நல்ல மழை பெய்யும்.
செப்டம்பர் 27 வரை மாநிலத்தில் நல்ல மழை பெய்யும். ஆனால், வறட்சி இதனால் குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.