கர்நாடகத்தில் 30ம் தேதி வரை கனமழை

பெங்களூர், செப். 22-
கர்நாடக மாநிலம் முழுவதும் செப்டம்பர் 30 வரை நல்ல மழை பெய்யும். ஆயினும் வறட்சி குறையுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பல இடங்களில் மழை பெய்யாமல் இருந்ததால் விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர். ஆயினும், தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் நகரம், பெங்களூர் ரூரல், சித்ர துர்கா, தாவணகெரே சாம்ராஜ் நகர், சிக்கலாப்பூர், ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை எதிர்பார்க்கலாம்.
செப்டம்பர் மாதத்தில் நல்ல மழை பெய்து வருவதால், இம்மாதம் இறுதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
செப்டம்பர் 30 வரை மாநிலத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வட கர்நாடகா வறட்சி நிறைந்திருப்பதால் பல மாவட்டங்களில் குடிநீர் மாசுபடுகிறது. மலப் பிரபா நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வறட்சியால் சோர்ந்து உள்ள விவசாயிகள் தங்கள் பயிரிட்ட பயிர்களை காப்பாற்ற பல வழிமுறைகளை அவர்கள் கையாண்டு வருகின்றனர்.
மழை பெய்யாதது அவர்களுக்கு கவலையை
ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் செப்டம்பர் 30 வரை நல்ல மழை பெய்யும். இதனால் வறட்சி குறையுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.