கர்நாடகத்தில் 5.3 கோடி வாக்காளர்களுடன் பாராளுமன்ற தேர்தல் பணி ஆரம்பம்

பெங்களுர் : ஜனவரி. 27 – எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐந்து கோடியே 37 லட்சத்து 85 ஆயிரத்து 815 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். பாராளுமன்ற தேர்தல்கள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்க உள்ளது. வாக்காளர்கள் விவரங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. ஆனாலும் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை வாககளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வாய்ப்பிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. தவிர அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்க்கவும் இதில் எவ்வித தவறுகள் நேராதவகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில தலைமைத்தேர்தல் ஆணையர் மனோஜ் குமார் மீனா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மாநிலத்தில் 2 கோடி 69 லட்சத்து 33 ஆயிர 750 ஆண் வாக்காளர்களும் 2 கோடியே 68 லட்சத்து 47 ஆயிரத்து 145 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்காளகளர்களுக்கிடையே அதிக எண்ணிக்கை வித்யாசம் இல்லாதது குறித்து மனோஜ் குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தவிர தற்போதுள்ள 18 -19 வயதுக்குட்பட்ட வாக்கார்களின் எண்ணிக்கை 6 45491 என்று இருக்கும் நிலையில் இப்போது இதுவே 1034018 என உயர்ந்துள்ளது. இது 50 சதவிகித அதிகரிப்பாகும் . இதே நேரத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1271862 பேறாகும். தவிர 100 வயதிற்கும் மேற்பட்ட 17937 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்தின் 224 சட்டமன்ற தொகுதிகளில் பெங்களூர் தெற்கு தொகுதி 717201 வாக்காளர்களுடன் அதிக வாக்காளர்கள் இடத்தில் உள்ளது. இதுவே சிக்கமகளூரின் சிருங்கேரி தொகுஹதியில் வெறும் 167556 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். தவிர வாக்காளர்கள் அட்டைகள் அவரவர் வீடுகளுக்கு விரைவு தபால் வாயிலாக விநியோகிக்கப்பட்டு வருகைறது. அப்படியும் எவருடைய பெயராவது வாக்காளர் பட்டியலில் இடம் பெற வில்லை என்றால் அவர்கல் உடனடியாக பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.