கர்நாடகத்தில் 9 மாவட்டங்களில் இன்று முதல் கனமழை

பெங்களூர், நவ. 22-
கர்நாடக மாநிலத்தில் 9 மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூர் நகரம், பெங்களூர் ரூரல், ராம் நகர், சாம்ராஜ் நகர், ஆகிய இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கர்நாடகத்தின் கடலோர மாவட்டமான தென் கன்னடாவில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சிக்பல்லாபூர், கோலார், மண்டியா ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யலாம்.
பெங்களூரில் கடந்த 10 நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
ஆனால் பெங்களூரில் நாளை 23, மற்றும் நாளை மறுநாள் 24 ஆகிய இரு நாட்கள் மழை பெய்யும். இந்த இரண்டு நாட்களும் 30 முதல் 35 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களில் சிக்மகளூர், குடகு, ஆகிய இரு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.