கர்நாடகத்தில தேர்தலன்று ஊதியத்துடன் விடுப்பு அறிவிக்க உத்தரவு

பெங்களூரு, மார்ச் 26: இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவைத் தேர்தலை மார்ச் 16 ஆம் தேதி அறிவித்தது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் முதல் கட்டம் ஏப். 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), இரண்டாம் கட்டம் மே 7 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அன்றும், யாத்கிரி மாவட்டத்தின் 36-ஷோராபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. இதுவும் மே 7 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது.
அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாக்களிக்க வசதியாக, கர்நாடக தொழில்முறை நிறுவனங்கள் (தேசிய மற்றும் திருவிழா விடுமுறைகள்) சட்டம், 1963 இன் பிரிவு 3-A மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 3. .135(b) தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தகுதியான வாக்காளர்களாகப் பதிவுசெய்யப்பட்ட தகுதியுள்ள தொழிலாளர்கள், ஊதியத்துடன் விடுப்பில் வாக்களிப்பதற்கான அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்துவதற்கு அனைத்து அமைப்புகளும், உரிமையாளர்க‌ளும் அவர்களை அனுமதிக்க வேண்டும்.
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தகுதியுள்ள தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக அனைத்து தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது. தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நிறுவனம், உரிமையாளர்கள் மீது விதிகளின்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.