கர்நாடகம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை

புதுடெல்லி, ஜன. 8: வட இந்தியா முழுவதும் கடும் குளிரில் தத்தளித்து வருகிறது., இப்போதைக்கு அங்கு குளிர் நிற்கும் அறிகுறியே இல்லை. இதற்கிடையே தென்னிந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் மிகவும் அடர்த்தியான மூடுபனி நிலவும், இது மிகவும் குளிரான வானிலைக்கு வழிவகுக்கும்.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஜன. 8 வரை கடுமையான குளிர் காலநிலை மக்களை பாதிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. மறுபுறம், அடுத்த 2-3 நாட்களில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடுமையான குளிரும் மழையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, ஜனவரி 8 முதல் ஜனவரி 10 வரை ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும்.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா-சண்டிகர்-டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் வடக்குப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலோர தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 3-5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.ஸ்கைமெட் வானிலை அறிக்கையின்படி, தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும், மேலும் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.லட்சத்தீவு, கொங்கன் மற்றும் கோவா, ராஜஸ்தான், கிழக்கு குஜராத், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசம் ஆகிய இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
பஞ்சாப், வடக்கு ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் மிகவும் அடர்த்தியான மூடுபனி ஏற்படலாம். கிழக்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ஓரிரு இடங்களில் அடர்ந்த மூடுபனி ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.