கர்நாடகா உட்பட 4 மாநிலங்களில் தேசிய புலனாய்வு துறை சோதனைகள்

பெங்களுர் : செப்டம்பர் . 2 – தேசிய புலனாய்வு துறை (ஏன் ஐ ஏ ) அதிகாரிகள் kகர்நாடகா உட்பட நாட்டின் நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தி தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திவந்த டிஜிட்டல் கருவிகள் மற்றும்சந்தேகத்துக்குரிய பொருள்களை கைப்பற்றி பரிசீலனை செய்துவருகின்றனர் . இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்பும் நோக்கில் இளைஞர்களை நியமித்து தீவிரவாத இயக்கங்களில் ஈடுபடுத்த இந்திய துணை கண்டத்தில் அல் கொய்தா (ஏ க்யூ ஏ எஸ் ) மற்றும் தெஹ்ரிக் – ஈ – தலிபான் ஆகிய இயக்கங்களின் நடவடிக்கைகள் தொடர்பாக ஏன் ஐ ஏ அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.கர்நாடகா , மஹாராஷ்டிரா , குஜராத் மற்றும் தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்களில் நடந்த பல சோதனைகளில் பல பொருள்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று இடங்களிலும் மற்றும் இதர மூன்று மாநிலங்களில் தலா ஒரு இடங்களிலும் சோதனைகளின்போது டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களை கண்டுபிடிக்க மற்றும் மேற்கூறிய இரண்டு தீவிரவாத இயக்கங்களின் சட்டவிரோத மற்றும் நாட்டில் அமைதியை உருகுலைக்கும் முயற்சிகளை தடுக்கும் நோக்கில் ஏன் ஐ ஏ அதிகாரிகள் இந்த கருவிகளை துருவி துருவி ஆய்ந்து வருகிறார்கள். இந்த தடைசெய்யப்பட்ட இயக்கங்களால் இதற்க்கு முன்னர் நியமிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளுக்கு எதிராக 2023 ஏப்ரல் மாதத்தில் பதிவான விவகாரங்கள் குறித்துஎன் ஐ ஏ அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்த்தானில் நிலங்கள் வாங்க வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியது உட்பட தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக தொடர் நடவடிக்கைகளில் இந்த இரண்டு பேரும் பங்கு கொண்டிருந்தனர்.இவர்கள் இருவரும் இந்தியாவில் மிகவும் தீவிரமாக செயல் பட்டுவந்த தங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர இளைஞர்களை இந்த இரண்டு தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் சேர்க்க முற்பட்டுவந்துள்ளனர் .என்பது என் ஐ ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது . இந்த நிலையில் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவும் மற்றும் நாட்டில் அமைதியை குழைத்து இனவாத கலவரங்களை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்துள்ளனர் . ஏ க்யூ ஐ எஸ் என்ற இயக்கம் இந்தியாவில் இஸ்லாமிய மாநிலத்தை அமைக்க உழைத்து வரும் பயங்கரவாத a இயக்கமாகும்.. இதே வேளையில் தெஹ்ரிக் – ஈ – தாலிபான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வரும் பல இல்சலாம் ஆயுதமேந்திய பல இயக்கங்களை உட்கொண்ட அமைப்பாகும்.