கர்நாடகா உட்பட 8 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு

புது டெல்லி: ஜனவரி 12 – கர்நாடகா உட்பட நாட்டின் 8 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு மத்திய அரசு கடும் கவலையை தெரிவித்துள்ளது. கர்நாடகா, மஹாரஷ்டிரா , மேற்கு வங்காளம் , டெல்லி , தமிழ்நாடு , உத்தரபிரதேசம் , கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் தொற்று அதிகரித்திருப்பது மிகவும் கவலை தரும் விஷயம் என மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிருபர்களிடம் இது குறித்து பேசிய அவர் மேற்கு வங்காளத்தில் கொரோனா பாசிடிவிடி அளவு 32.18 , மஹாராஷ்டிராவில் 22.39 , டெல்லியில் 23. உத்தரபிரதேசத்தில் 4.4 சதவிகித்திற்கு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாசிட்டிவ் புகார்கள் அதிகளவில் பதிவாகிவருவதுடான் தற்போது நாட்டில் இந்த தொற்று 9.55 லட்சம் பேரை பாதித்துள்ளது உள்ளது என தகவல் அளித்துள்ளார்.