கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டித்து பிஜேபி போராட்டம்

பெங்களூரு, மே 28:
அடிப்படை பிரச்னைகளை தீர்க்காத காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக பாஜக, இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
2 நாட்களுக்கு முன்பு, பாஜக ஆலோசனை கூட்டம் மல்லேஸ்வரத்தில் நடந்தது.. அப்போது, பெங்களூருவின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக, மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் தலைமையில், அக்கட்சியின் பெங்களூரு எம்எல்ஏக்கள், முன்னாள் மேயர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் போன்றோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
விஜயேந்திரா: ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு விஜயேந்திரா சொன்னபோது, “பெங்களூரு நகரின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காத, காங்கிரஸ் அரசை கண்டித்து, 28ம் தேதி அனைத்து வார்டுகளிலும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும். நகர மக்களுக்கு நீதி கிடைக்க செய்ய, பாஜக தொடர்ந்து போராடும். வெறும் பெயரளவுக்கு போராட்டம் நடத்தாமல், பெரிய அளவில் நடத்துவோம். பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்.
காங்கிரஸ் இப்போது ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும், இதுவரை எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. நகரின் வளர்ச்சிக்கு 1 ரூபாய் கூட நிதி வழங்கவில்லை. சாலைகளில் பள்ளங்கள் தான் காணப்படுகின்றன… குப்பை, கழிவுகள் சரியாக நிர்வகிக்கப்படவில்லை. அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள், பெங்களூரில் இருந்தும், வளர்ச்சிப் பணிகள் நடக்கவில்லை… கனமழைக்கான தயார்நிலை குறித்து நகர ஆணையர் உத்தரவாதம் அளித்த போதிலும், நிலைமை மோசமாகவே இருக்கிறது.
சொத்துக்கள்: அரசு சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு வரி மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.. பதிவு செய்தாலும், அது பெங்களூரு மக்களுக்கு உதவவில்லை,.. பெங்களூருவில் அதிக அமைச்சர்கள் இருந்தாலும், நகரின் வளர்ச்சி பற்றி யாரும் கவலைப்படவில்லை.. அதனால், இந்த பிரச்சனைகள் குறித்து, கவனத்தை ஈர்த்து, பெங்களூரு மக்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படுகிறது” என்றார் விஜயேந்திரர். ஏற்கனவே கர்நாடக பாஜகவில் புயல்வீசிக் கொண்டிருக்கிறது.. வருகிற 31ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தருவதாக தலைமறைவாகியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டிருக்கிறார்.. இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸை கண்டித்து, இன்று முன்னெடுத்துள்ள போராட்டம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.