கர்நாடக அரசின் பிரிவினைவாதம்-நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

புது டெல்லி : பிப்ரவரி. 8 : கர்நாடக arasin இலவச திட்டங்களால் ஏற்பட்டுள்ள 58000 கோடி நிதி இழப்பை சமாளிக்க முடியாமல் சித்தராமையா அரசு திணறி வருகிறது என கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதி குறித்து பிரிவினைவாத போக்குடன் சித்தராமையா அரசு வீணாக மத்திய அரசை குற்றம் சாட்டிவருகிறது. மாநில முதல்வர் சித்தராமையா சமீபத்தில் மத்திய அரசின் போக்கை கண்டித்து தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார். மத்திய அரசு வரி தொடையை மாநிலத்திற்கு அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாவும் வறட்சி நிவாரணம் அளிப்பதிலும் மத்திய அரசு தாமதித்து வருவதாகவும் சித்தராமையா குற்றம்சாட்டியிருந்தார். நிதி அமைச்சருடன் இனைந்து மாநில பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் ப்ரஹலாத் ஜோஷி இருவரும் இனைந்து மாநிலம் இது வரை விடுத்துள்ள நிதி கோரிக்கைகள் குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டிருப்பதுடன் ஜி எஸ் டி தொகையில் மாநிலத்திற்கு எந்த பாக்கியும் மத்திய அரசு வைக்க வில்லை என்றும் வீணாக சித்தராமையா மத்திய அரசை குற்றம் சாடுகிறார் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். தவிர மாநில அரசு சார்பில் தேசிய நாளிதழ்களில் மத்திய அரசை சாடி விளம்பரங்கள் கொடுத்திருப்பது குறித்தும் நிர்இது மலா சீதாராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது போன்ற குற்றச்சாட்டுகள் பிரிவினைவாத மனப்போக்குடன் செயல்படுவதாகும் என தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் நாட்டை து துண்டிக்க முயல்பவர்களுடன் காங்கிரஸ் இணைந்துள்ளது. மாநில அரசின் விளம்பரங்கள் அந்த வகையில் தான் உள்ளன. தவிர துணை முதல்வர் டி கே சிவகுமாரின் தம்பி டி கே சுரேஷ் தென் இந்தியா தனி நாடு கேட்கும் காலம் வரும் என கூறியிருப்பதற்கும் கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன் மத்திய அரசு கர்நாடக மாநிலத்திற்கு அளித்துள்ள நிதி விவரங்களை புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார். 15வது நிதி குழு அறிவித்த 5495 கோடி ரூபாயை மத்திய அரசு கர்நாடகாவுக்கு அளிக்க வில்லை என்பதில் எந்த உண்மையும் இல்லை. என தெரிவித்த நிர்மலா சீதாராமன் அந்த வகையில் நிதி குழு இறுதி அறிக்கை அளிக்கவில்லை. ஆனாலும் மத்திய அரசு மாநிலத்திற்கு 50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லா கடனாக 6279.94 கோடி ரூபாய்கள் அளித்துள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார். ஆனாலும் 2024 மார்ச் மாதத்திற்குள்ளாக மாநிலத்திற்கு 129854 கோடி ரூபாய்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என்றார். தவிர இடைநிலை நிதி அறிக்கையிலும் 44485 கோடி கர்நாடகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இது மொத்தம் 174339 கோடிகளாகும் என்றார்.