கர்நாடக அரசு இரட்டை வேடம் குமாரசாமி கடும் தாக்கு

பெங்களூர் : ஜூலை. 30 – பெல்லாரியை சேர்ந்த பிரவீன் நெட்டாரு கொலை விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமத்திற்கு (என் ஐ ஏ ) ஒப்பித்துள்ள மாநில அரசு கடலோர மாவட்டத்தில் நடந்த கொலைகளையெல்லாம் என் ஐ ஏ விசாரணைக்கு ஒப்படைக்க பின்வாங்குவது ஏன் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். கடலோர மாவட்டங்களில் கடந்த 10 நாட்களில் நடந்த மூன்று கொலை விவகாரங்களை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள ஹெச் டி குமாரசாமி அரசுக்கு எதிராக புகார் பட்டியல் வெளியிட்டிருப்பதுடன் ரத்த ஆறு ஓடும் அளவிற்கு வாக்கு ஆறு பாயும் என பி ஜே பிக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு கொலைகள் நடந்த பெல்லரே கிராமத்திலாவது பொம்மை முதல்வரின் கௌரவத்திற்கு தகுந்தபடி அமைதி , பாதுகாப்பு குறித்து ஒரு வார்த்தையும் பேச வில்லை. இது தேர்தல் வருடமல்லவா , கொலைகள் அதிகளவில் நடக்க வேண்டும். அவர்களின் வாக்கு பெட்டிகள் நிரம்ப வேண்டும். ரத்த ஆறு ஓடும் அளவிற்கு வாக்குகள் ஆறு பெருகும் என்றும் குமாரசாமி தாக்கியுள்ளார். கடலோர பகுதிகளில் ஒவ்வொரு கொலை குறித்தும் அரசுக்கு தகவல் தெரியும் . இந்த கொலைகள் எதற்காக நடக்கின்றன என்பதும் தெரியும். ஆனால் இரட்டை இன்ஜின் அரசு இரட்டை ஆட்டம் ஆடுகிறது. உலகின் மிக பெரிய அரசியல் கட்சி என்று பீற்றிக்கொள்ளும் பி ஜே பி தனக்கு அதிகாரம் தந்து கொடுத்த இளைஞர்களின் உயிருக்கு உறுதி அளிக்க முடியாத நிலையில் தோல்வி அடைந்துள்ளது எனவும் குமாரசாமி நையாண்டி செய்துள்ளார்.