கர்நாடக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் : 8 சதவிகித சம்பள உயர்வு

பெங்களூர், மே 18- மாநில அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த உடன் 7வது சம்பள ஆணையத்தின் சிபாரிஸின்படி சம்பளம் அகவிலைப்படி , மற்றும் இதர வசதிகள் அதிகரிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. இறுதியாக 8 முதல் 8.5 சதவிகித சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுவதுடன் , மொத்தம் உயர்வு 25 முதல் 25.5 அளவுக்கு இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த மார்ச் 16 அன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையாகும் சில மணி நேரங்களுக்கு மின்னார் 7வது சம்பள ஆணையத்தின் சிபாரிசு அறிக்கையை பெற்றுக்கொண்ட முதல்வர் சித்தராமையா இந்த அறிக்கையை தீவிரமாக ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்க மாநில நிதி துறையிடம் தெரிவித்திருந்தார். அதன்படி ஆணைய சிபாரிசான 27.5 சதவிகித உயர்வுக்கு பதிலாக 25 சதவிகிதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆணையத்தின் இறுதி அறிக்கையை எதிர்பார்த்து முந்தைய முதல்வர் yes ஆர் பொம்மை தலைமையிலான அரசு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் 17 சதவிகிதம் இடைக்கால நிவாரணமாக சம்பளத்தை உயர்த்தி இது ஏப்ரல் 2023முதல் நடைமுறைக்கு வந்தது. அரசு ஊழியர்களின் வற்புறுத்தலால் சித்தராமையா 2024-25நிதிநிலை அறிக்கையில் 7வது சம்பள ஆணையத்தின் அறிக்கை எதிர்பார்ப்பில் 15431 கோடி ரூபாய் ஒதிக்கியிருந்தார். ஆனாலும் இந்த 7வது சம்பள ஆணையத்தின் ஐந்து பணி நாட்கள் , உட்பட சில சிபாரிசுகளை உள்ள சாதக பாதகங்களை பரிசீலித்து ஆலோசனைகள் வழங்குமாறு உயர்மட்ட கமிட்டியை அமைக்க அரசு விரும்புவதாக தெரிகிறது.