கர்நாடக அரசை கலைக்க வேண்டும் கவர்னருக்கு காங்கிரஸ் கோரிக்கை

பெங்களூரு, நவ. 25- மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் பாரதீய ஜனதா அரசு கமிசன் அரசாக இருப்பதுடன் ஊழலும் எல்லையை மீறி உள்ளதால் இந்த அரசை கலைக்குமாறு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குழு இன்று ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிக்கவுள்ளது . காங்கிரஸ் தலைவர்கள் கொண்ட குழு இன்று இரவு 7. 30 மணிக்கு ஆளுநர் தாவர்ச்சந்த் கெஹெல்டடை சந்தித்து ஊழலில் மூழ்கியுள்ள இந்த அரசை கலைக்குமாறு வற்புறுத்தவுள்ளது. மாநிலத்தின் செயல் திட்டங்களின் டெண்டர்களை பெற 40 சதவிகிதம் அளவிற்கு கமிஷன் பெறப்படுகிறது . என குத்தகையாளர்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தை ஆதாரமாக கொண்டு இன்று ஆளுநரை சந்திக்க உள்ள காங்கிரஸ் குழுவினர் இந்த அரசை கலைக்குமாறு வற்புறுத்த உள்ளனர்.மாநிலத்தில் ஊழல் அதிகரித்து ஆளும் கட்சியினர் லூட்டி அடித்து வருகின்றனர். இது குறித்து பிரதமருக்கும் குத்தகையாளர்களே தெரிவித்துள்ளனர். அதனால் ஊழலுக்கு கடிவாளம் போடா இந்த அரசை கலையுங்கள் என காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தல் கோரிக்கை மனுவை இன்று ஆளுநருக்கு கொடுக்க உள்ளனர்.இ ந்த குழுவில்எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் , மேலவை கட்சி தலைவர் எஸ் ஆர் பாட்டில் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.