கர்நாடக அரசை கவிழ்க்க சதி

பெங்களூர் : அக்டோபர் . 18 – பி ஜே பியினர் ஆட்சியை கவிழ்க்க நடத்திவரும் சூழ்ச்சிகள் குறித்து எங்களுக்கு தகவல்கள் தெரியும். பி ஜே பி தலைவர்கள் சந்தித்துள்ள எம் எல் ஏக்களே சட்டமன்ற கூட்ட தொடரில் ஆட்சியை கவிழ்க்க பி ஜே பி நடத்திவரும் தந்திரங்களை எடுத்துரைக்க உள்ளனர் . என துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். நகரின் சதாசிவநாகரில் உள்ள தன் வீட்டில் இன்று செய்தியாளர்களிடம் சிவகுமார் பேசுகையில் பி ஜே பியை சேர்ந்த குழு ஒன்று ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருகிறது . இந்த தகவல்கள் முழுதும் எங்களுக்கு தெரியும். பி ஜே பியினர் எந்தெந்த எம் எல் ஏக்களை சந்தித்தனர் , எங்கு எப்போது சந்தித்தனர் எந்த நம்பிக்கைகளை அவர்களுக்கு அளித்துள்ளனர் , என்பது போன்ற விவரங்களை எம் எல் ஏக்களே எனக்கும் முதல்வருக்கும் தெரிவித்துள்ளனர். அனைத்து குறித்தும் எங்களுக்கு நன்றாக தெரியும்.. பி ஜே பியினர் என்னவெல்லாம் நம்பிக்கைகள் கொடுத்துள்ளனர் , என்பது குறித்தும் எங்கள் எம் எல் ஏக்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர் . எங்களிடம் ஒவ்வொரு தகவலும் உள்ளது . சட்டமன்ற கூட தொடரின்போது அனைத்தையும் வெளிப்படுத்துவோம். பி ஜே பியினர் சந்தித்த எங்கள் எம் எல் ஏக்கள் வாயிலிருந்தே கூட்டத்தொடரில் அனைத்தையும் தெரியப்படுத்துவோம் . பி ஜெ பி மற்றும் ம ஜா தாவினார் விரக்தியின் எல்லைக்கு வந்துள்ளனர்.
அவர்களுக்கு டாக்டர்கள் தான் பெரிய அறுவை சிகிச்சை செய்து சரிபடுத்தவேண்டும். முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பி ஜே பியின் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜாரகிஹோலியின் சந்திப்பு லுறித்து அனைத்து விதத்திலும் சந்தேகப்படுவது சரியல்ல . ஜெகதீஷ் ஷெட்டர் தன்னுடைய சக்தி என்ன என்பதை காட்டியுள்ளார் . இது குறித்து நான் அதிகம் பேச விரும்புவதில்லை இவ்வாறு செய்தியாளர்களிடம் துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்தார் .