கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு 3 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க சிபாரிசு

பெங்களூர் : செப்டம்பர். 13 – மாநில உயர்நீதிமன்றத்தின் மூன்று கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்கி உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. நீதிபதிகளான முஹம்மத் கௌஸ் சுக்ரே கமல் , ராஜேந்திர பாதாமிகர் , காஜி ஜெய்புன்னிசா மொயூதீன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்குமாறு கொலிஜியம் சிபாரிசு செய்துள்ளது. மாநில உயர்நீதிமன்றத்தில் 62 நீதிபதிகள் பதவிகள் இருப்பதுடன் தற்போது இதில் 48 நீதிபதிகள் பணியில் உள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா , மும்பை மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றங்களில் 20 நீதிபதிகளை நியமனம் செய்ய தலைமை நீதிபதி யு யு லலித் தலைமையிலான உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று நடந்த கொலிஜியம் கூட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் ஒன்பது நீதிமன்ற அதிகாரிகளுக்கு நீதிபதிகளின் சம்பளம் வழங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் வலை தளத்தில் அப்லோட் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் படி மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இரண்டு வழக்கறிஞர்களை நியமிக்கும் படியும் கொலிஜியம் ஒப்புக்கொண்டுள்ளது. அதே போல் செப்டம்பர் 7 அன்று நடந்த கூட்டக்த்தில் ஆறு நீதிமன்ற அதிகாரிகளை மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவி உயர்த்த மற்றும் மூன்று கூடுதல் நீதிபதிகளை கர்நாடகா உய்ரநீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.