கர்நாடக கஜானா காலி குமாரசாமி கடும் விமர்சனம்

பெங்களூர், ஏப் 22-
மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் இல்லை. ஐந்து உத்தரவாதங்கள் என்ற பெயரில் அடுத்த சில நாட்களில் அரசின் கஜானாவை முழுவதுமாக
காலி செய்து உங்களை கடனாளி ஆக்குவதுதான் மாநில அரசின் சாதனை.
என ஜே.டி.எஸ். மாநில பிரிவு தலைவர், எச்.டி. குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூர் வடக்கு மக்களவைத் தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சோபா கரந்தலஜேவை ஆதரித்து தேர்தல்
பிரச்சாரத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
உத்தரவாத திட்டத்திற்காக கர்நாடக அரசு இதுவரை1.05 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த கடனை யார் திருப்பி செலுத்துவார்கள். அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.
எனவே கவனமாக முடிவெடுத்து வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சதானந்தகவுடா பேசுகையில், கடந்த பல லோக்சபா தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இம்முறையும் நாடு முழுவதும் 400 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம்.
பெங்களூர் வடக்கு தொகுதியில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சோபா கரந்தலஜே வெற்றி பெறுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சோபா கரந்தலாஜே கூறுகையில், எச்.டி. தேவகவுடா நாட்டின் பாதுகாப்பிற்காக பா.ஜ.க. வுக்கு ஆதரவளித்துள்ளனர்.
‘மோடி மீண்டும் நாட்டுக்கு’ என்ற செய்தியை கூட்டணி அமைப்பினர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கின் றனர். இம்முறையும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்றார்.
எம்.எல்.ஏ., எஸ். முனிராஜ் மாநில ஜேடிஎஸ் துணைத் தலைவர் அந்தனப்பா, தொகுதி ஜேடிஎஸ் தலைவர் எம். முனுசாமி, மண்டல தலைவர் சோமசேகர், பாகல் குண்டே வார்டு தலைவர் அனுமந்த ராயப்பா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாசரஹள்ளி, சொக்க சந்திரா ரெண்டாவது ஸ்டேஜ், ஹெக்கனஹள்ளி, சுங்கச்சாவடி வரை ரோடு ஷோ நடத்தப்பட்டது.