கர்நாடக கணவன் மனைவி மகன் அமெரிக்காவில் மர்ம சாவு

தாவணங்கெரே, ஆக.19-
கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்த சாப்ட்வேர் தொழில்நுட்ப தம்பதி மற்றும் அவர்களது மகன் ஆகியோர் அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். மேரிலாண்ட் மாநிலம் பால்டிமோர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் தாவணகேரே மாவட்டம் ஜகலுரு தாலுகாவில் உள்ள ஹல்லேகல்லு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெயர்கள் யோகேஷ் ஹொன்னாலா (37), பிரதிபா (35) மற்றும் யாஷ் (6) என தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வேலை செய்து வந்துள்ளனர். ஒரே நேரத்தில் இவர்கள் மூன்று பேரும் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.