கர்நாடக காங்கிரசில் அதிருப்தி

பெங்களூர் : நவம்பர். 8 – ஹிந்து என்பது ஆபாச வார்த்தை என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ள கே பி சி சி செயல் தலைவர் சதீஷ் ஜாரகஹோலியின் கருத்து அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. அவருடைய தற்போதைய மாநில காங்கிரஸ் செயல் தலைவர் பதவிக்கும் இதனால் கத்தி விழவுள்ளது . சதீஷ் ஜாரகஹோலியின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பலரின் அதிருப்தி மற்றும் ஆத்திரத்துக்கு காரணமாயிருப்பதுடன் அவரை பதவியிலிருந்து நீக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது . ஹிந்து என்பது நம்முடைய வார்த்தையே இல்லை. இது பெர்சியாவிலிருந்து வந்துள்ள பதம். ஹிந்து என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஆபாசமானது என நேற்று சதீஷ் ஜாரகிஹோலி பெலகாவியில் நிப்பானில் பேசியுள்ள பேச்சிற்கு அதிருப்திகள் வெளிப்பட்டுள்ளது. தன்னுடைய பேச்சிற்கு பல திசைகளிலுமிருந்து வந்துள்ள எதிர்ப்புக்கு பதிலளிக்கும் வகையில் சதீஷ் இன்று இது என் தனிப்பட்ட கருத்தல்ல . என்னுடைய பேச்சு திருத்தி வெளியிடப்பட்டுள்ளது . ஆதாரங்களை மேற்கொண்டு நான் இந்த வகையில் பேசினேன். என விவரங்கள் அளித்தும் அவருடைய கருத்திற்கு அவருடைய கட்சிக்குள்ளேயே ஆவேசம் , அதிருப்திகள் வெளிப்பட்டு வரும் நிலையில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரணதீப் சிங்க் சுர்ஜீவாலா , மாநில கட்சி தலைவர் டி கே சிவகுமார் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் சதீஷ் ஜார்கிஹோலியின் பேச்சிற்கு பகிரங்கமாகவே தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பி ஜே பி கட்சியும் சதீஷின் இந்த சர்ச்சையான கருத்தை ஆயுதமாக கொண்டு காங்கிரஸ் கட்சியை தாக்க முற்பட்டிருக்கும் நிலையில் மாநில பி ஜே பி பொறுப்பாளர் அருண்சிங்க் உட்பட பி ஜே பியின் பல அமைச்சர்கள் , எம் எல் ஏக்கள் , சதீஷ் ஜாரகஹோலிக்கு எதிராக கிளம்பியுள்ளனர் . இதுவே தேர்தல் நேரத்தில் காங்கிரசுக்கு கண்டமாக திரும்பி விடும் என்ற நிலையில் சதீஷ் ஜாராகிஹோலியிடமிருந்து செயல் தலைவர் பதவிக்கான ராஜனாமாவை பெற்று அதன் வாயிலாக இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் யோசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. சதீஷ் ஜாரகிஹோலி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள நிலையில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரணதீப் சிங்க் சுர்ஜீவாலா , கட்சியின் மாநில தலைவர் டி கே சிவகுமார் , மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோருடன் தொலைபேசியில் பேசி சதீஷ் ஜாரகஹோலியின் ராஜினாமாவை பெற தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் சதீஷ் ஜாரகஹோலியின் தற்போதைய காங்கிரஸ் மாநில செயல் தலைவர் பதவி விரைவில் பறிபோவது உறுதி என தெரிய வருகிறது.