கர்நாடக காங்கிரசில் கருத்து வேறுபாடு இல்லை

பெல்லாரி நவ.22-

கர்நாடக மாநில காங்கிரசில் கருத்து வேறுபாடு இல்லை என்று இந்த கட்சியின் மாநில தலைவர் டி கே சிவகுமார் கூறினார் வெள்ளரியில் இன்று நடந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார் அப்போது அவர் பேசியதாவது கர்நாடகத்தில் பிஜேபி ஆளும் கட்சியாக இருந்தாலும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து காங்கிரசில் சேர்ந்து வருகின்றனர் இது மக்கள் காங்கிரஸ் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் வெற்றி பெறுவது வழக்கம் தான். பிஜேபி மற்றும் ஜனதா தளத்தைச் சேர்ந்த பலர் காங்கிரசில் சேர என்னை அணுகி உள்ளனர் அவர்கள் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர் கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக உள்ளனர் கொள்கை அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர் எந்த கருத்து வேறுபாடும் இல்லை இவ்வாறு சிவகுமார் கூறினார்