கர்நாடக காங்கிரஸ் அரசு குறித்து பிஜேபி வெளியிட்ட பரபரப்பு சுவரொட்டி

பெங்களூர், அக். 21-
விரைவில் நடக்க இருக்கும் 5 சட்டசபைத்தேர்தலுக்கு பணம் திரட்டுவதாக காங்கிரஸ் அரசை பிஜேபி விமர்சித்து, ‘ஏடிஎம் சர்க்காரா கலெக்சன் ட்ரீ’ என்று சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.
இந்த சுவரொட்டியில் காங்கிரஸ் எம்.பி.யும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி படம் மேலேயும், அதற்கு கீழ் தேசிய பொது செயலாளர் ரஞ்சித் சிங் சுர்ஜிவாலா, மற்றும்
கே. சி .வேணுகோபால், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி. கே. சிவகுமார, சித்தராமையாவின் மகன் எத்தீந்ரா சித்திராமையா, அமைச்சர் பைரத்தி சுரேஷ் ,மற்றும் காண்ட்ராக்டர் அம்பிகாபதி ,ஆகியோர் இந்த சுவரொட்டியில் படம் இடம்பெற்றுள்ளது.மாநில மக்கள் இந்த அரசு எப்படி ஐந்து மாதங்கள் ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று இதனை அவர்கள் தயாரித்து வெளியிட்டுள்ளனர். மேம்பாட்டு பணிகள் இந்த அரசால் எதுவும் நடக்கவில்லை. ஒரே ஒரு சாலையின் பள்ளத்தை யும் மூட வில்லை என்று முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா இந்த சுவரொட்டியை வெளியிட்டு தெரிவித்தார்.
டில்லி தான் கலெக்டரின் மைய பகுதி என்பதை அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ராகுல் காந்தி தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஐந்து மாநில தேர்தலுக்கு நிதி விவகாரம் அவரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
முதல்வர் சித்ராமையா மற்றும் துணை முதல்வர் டி கே சிவக்குமார் இடையே பணம் வசூலிப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு டி.கே.சிவகுமார் மீது விசாரணையில் இருப்பதால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தசரா திருவிழாவுக்கு பிறகு காங்கிரஸ் அரசுக்கு எதிராக பிஜேபி மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் கொள்ளையில் இருந்து மாநில அரசை மீட்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.