கர்நாடக காங்கிரஸ் உற்சாகம்

Crowd at devengere

தாவணகெரே : ஆகஸ்ட். 3 – தேவநகரி தாவணகெரேவில் இன்று நடந்துள்ள சித்தராமோத்சாவா முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமைக்கு பலத்தை கூட்டுவதுடன் முன் வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் நோக்கில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. சித்தராமையாவின் பிறந்தநாள் பவழ விழா உற்சவத்தில் காங்கிரசின் இளவரசர் ராகுல் காந்தி பங்கு கொண்டிருப்பது அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடும் வகையில் தொண்டர்களுக்கு புதிய உற்சாகம் தந்துள்ளது. சித்தராமோத்சாவா முன்னாள் முதல்வர் சித்தராமையாவை அடுத்த முதல்வர் என காட்டும் வகையில் நடத்தப்படும் விழா என்றாலும் இந்த விழா காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உற்சாகத்தை இரட்டிப்பாக்கி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களுக்கு கட்சி தொண்டர்களை இப்போதிலிருந்தே தயாராகும்படி தொண்டர்களுக்கு அறிவுறுத்தும் நடவடிக்கையாக உள்ளது. அடுத்த தேர்தலை காங்கிரஸ் கட்சி பொது தலைமையின் கீழ் எதிர்கொள்ள முடிவு செய்துள்ள நிலைமையிலும் இந்த சித்தராமோத்சாவா சித்தராமையாவின் தலைமையை மேலும் உயர்வுக்கு கொண்டு சென்று காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கிடையே புதிய எழுச்சி உற்சாகம் ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது. தாவணகெரேவில் நடந்துள்ள சித்தராமையாவின் 75ஆவது பிறந்த நாள் விழாவிற்கு மாநிலத்தின் மூலை முடுககுகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்திருப்பது சித்தராமையா மீது மக்கள் மற்றும் அவர் மக்கள் மீது கொண்டுள்ள விசுவாசம் , ஆகியவற்றிற்கு இந்த மாநாடு சாட்சியாகியுள்ளது. இன்று காலை முதலே மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சித்தராமையா ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தாவணகெரே நோக்கி வந்திருப்பதுடன் அடுத்த முதல்வர் சித்தராமையா என்ற கோஷங்களை விண்ணை முட்டும் அளவிற்கு கூவியபடி தொண்டர்கள் வந்தபடி இருந்தனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து தொண்டர்களும் சித்தராமையாவே அடுத்த முதல்வர் என்ற மனநிலையில் உள்ளனர். இந்த விஷயத்தில் அனைவரின் உற்சாகமும் எல்லை மீறி உள்ளது. அனைவரின் வாய்களிலும் வெறும் சித்தராமையா ஜபம் . இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்த சித்தராமோத்சாவா மேடையை பயன் படுத்தி அடுத்து வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரும் ஒரே நோக்கத்துடன் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் தங்கள் கருத்து பேதங்களை மறந்து உழைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்