கர்நாடக காங்கிரஸ் – பிஜேபி வேட்பாளர்கள் தேர்வு ஆலோசனை கூட்டம்

பெங்களூர், மார்ச் 11-
லோக்சபா தேர்தலில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக ,முக்கிய கூட்டம் காங்கிரஸ், மற்றும் பிஜேபி தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடக்கிறது.
பல்வேறு காரணங்களால் மோதல் ஏற்படும் தொகுதிகளில் ஒருமித்த வேட்பாளர் நிறுத்த விரிவான ஆலோசனை நடத்தப்படுகிறது.
முன்னதாக, திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை பிஜேபி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. மாநில தலைவர்களும், டெல்லி வருமாறு தலை நிலையம் அறிவுறுத்தி இருந்தது.
எனினும் இந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டு, திங்கட்கிழமைக்கு நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பிஜேபியில் பதவியில் உள்ள 10 எம்.பி.கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.
உடல் நலக்குறைவு காரணமாக, சிலர் விலகிடும் நிலையில், மற்றவற்றில் ஹை கமாண்ட் சர்வே ஒத்துக்கொள்ளவில்லை.
எனவே மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற கருத்துக்கணிப்பில், கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும், சில தொகுதிகளில் தற்போதைய எம்.பி.,கள் மட்டுமே பரிசீலிக்க வேண்டும் என்று கட்சியின் மாநில பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சாதக பாதகங்கள் குறித்து ஆலோசித்து தொடர, ஹை கமாண்ட் முடிவு செய்தது.
இந்த நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிய வருகிறது.
முதல் கட்டமாக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மாநிலத் தலைவர் விஜயேந்திரா, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், உள்ளிட்ட தலைவர்களுடன் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் தேசியத் தலைவர்
ஜே.பி. நட்டா , உள்துறை அமைச்சர் அமித்ஷா, பங்கேற்க உள்ளனர்.
அதன் பின்னர் மத்திய தேர்தல் குழு கூட்டம் இரவு நடக்கும். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நடக்கும் இந்த கூட்டங்களுக்கு பிறகு இரண்டொரு நாளில், பிஜேபியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இது ஒரு கட்டமாக வெளியாகும் என தெரிகிறது.
தொகுதி பங்கீடு குறித்து பிஜேபி தலைமையில் இருந்து அழைப்பு வரும் என்று ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி காத்திருக்கிறார் .இந்த வாரம் டெல்லி செல்ல அவருக்கு வாய்ப்பு உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸில் ஏழு தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மறுபக்கம் திறமையானவர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அமைச்சர்களை களம் இறக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த நிலையில், பெங்களூரில் காங்கிரஸ் ஸ்கிரீனிங் கமிட்டி கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்திற்கு ஹரிஷ் சௌத்ரி மற்றும் உறுப்பினர்களான மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.இதில் முதல்வர் சித்நராமையா, துணை முதல்வர் டி. கே. சிவகுமார், சில முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.அந்தந்த தொகுதிகளுக்கு ஒரே பெயரை பரிந்துரைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும் அமைச்சர்கள் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தப்படுகிறது.அமைச்சர்களை போட்டியிட வைக்க உள்ளவர்களை கூட்டத்திற்கு வரவழைத்து ,அறிவுரை வழங்கவும் வாய்ப்பு உள்ளது .டெல்லியில் மாலை காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் நடைபெறும். ஸ்கிரீனிங் கமிட்டி பரிந்துரைத்த பட்டியல் அடிப்படையில் மாநிலத்திற்கான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதாகவும் அதற்கான பயிற்சியை தேர்தல் குழு மேற்கொள்ளவும் உள்ளது.