கர்நாடக துணை முதலமைச்சர்டி.கே.சிவகுமார் மீது எப்ஐஆர்

பெங்களூர் : ஏப்ரல் 2 – பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதன் தலைவர்கள் குறித்து அவதூறு மற்றும் மக்களை தூண்டும் விதத்தில் செய்திகள் வெளியிட்டதால் இந்த சட்ட பிரிவுகள் கீழ் மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் மற்றும் பி ஆர் நாய்டு ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கை இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 153 ஏ (பல்வேறு குழுக்களிடையே பகைமையை தூண்டுவது ) , 504 ( வேண்டுமென்றே தூண்டும் நோக்கத்துடன் அவமதிப்பது ), 506 (குற்றவியல் மிரட்டல் ) , மற்றும் 464 ( தவறான ஆவணங்கள் ) ஆகிய பிரிவுகளில் நகரின் ஹை கிரவுண்ட் போலீஸ் நியாயத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது . கடந்த பிப்ரவரி மாதம் இந்த புகார்கள் குறித்துவழக்கு பதிவு செய்யுமாறு கூடுதல் மெட்ரோபாலியன் நீதிமன்றம் நகர போலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. பாரதீய ஜனதா சட்ட பிரிவு முன்னாள் செயலாளர் யோகேந்திரா ஹோடகட்டடா பதிவு செய்த புகார் மனு மீது இந்த விசாரணை நடந்துள்ளது. 1992 பாபரி மசூதி இடிப்பு சம்பவத்தில் கலந்து கொண்ட கர சேவகர் ஸ்ரீகாந்த் பூஜாரியை கைது செய்ததை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பாரதீய ஜனதா பிரமுகர்கள் கலந்து கொண்டனர். “நானும் கர சேவகன் ,, என்னையும் கைது செய்யுங்கள் “ என்ற வாசக பதாகைகளை கையில் பிடித்தபடி தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆனால் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் இந்த பதாகைகளில் பாரதீய ஜனதாவினரே மோதி அரசின் ஊழல் மற்றும் அக்கிரமங்களை பிரசாரம் செய்வது போன்று பதாகைகள் வாசகங்களை மாற்றி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது மாநில சிங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமாரின் தனிப்பட்ட சமூக வலைத்தளத்திலும் பிரசாரமாகிஇருந்தது குறிப்பிடத்தக்கது.