கர்நாடக தேர்தல் ஏற்பாடு

பெங்களூர் மார்ச் 9
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ராஜிவ் குமார் இன்று பெங்களூர் வந்து தொடர் ஆலோசனைகள் நடத்தினார்.
கர்நாடக மாநில தேர்தல் ஆணையர்கள் உடன் தலைமை தேர்தல் ஆணையர் அனைத்து விபரங்களையும் கேட்டு அறிந்தார். கர்நாடக மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலை குறித்தும் எப்போது தேர்தல் நடத்துவது என்பது குறித்தும் கலந்துரையாடினார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலை பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மாநிலத்தில் தேர்தல் ஜுரம் நிதானமாக சூடு பிடித்து வரும் நிலையில் தேர்தல் ஆணையமும் நேர்மையான மற்றும் நியாயமான வகையில் தேர்தல்களை நடத்த அனைத்து விதமான தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மாநில சட்டமன்ற தேர்தல்களின் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணிய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மூன்று நாள் பயணமாக இன்று மாநிலத்திற்கு வருகை தர இருப்பதுடன் மாநில அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர் கூட்டங்களில் பங்கு கொள்ள உள்ளார். மாநிலத்தில் எப்போது தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலுக்கு எந்தெந்த தேதிகள் உசிதம் , என அனைத்து விஷயங்கள் குறித்தும் தலைமை தேர்தல் ஆணையர் மாநில அதிகாரிகளிடம் ஆலோசனைகள் நடத்த உள்ளார். தவிர நேர்மையான மற்றும் நியாயமான வகையில் தேர்தல்களை நடத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்த உள்ளார். டெல்லியிலிருந்து தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு இன்று பிற்பகல் நகருக்கு வர இருப்பதுடன் தேர்தல் ஆனியர்களான அனூப் சந்திர பாண்டே , அருண் கோயல் மற்றும் துணை ஆனார்கள் , தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் , இந்த குழுவில் உள்ளனர். டெல்லியிலிருந்து நகருக்கு வந்த உடனேயே தலைமை தேர்தல் அதிகாரி விதான சௌதாவில் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் தயாரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவார். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் வாயிலாக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து தகவல்கள் கேட்டறிந்து தேர்தல்களை எப்போது நடத்தவேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகளின் கருத்தை கேட்டறிந்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசிக்க உள்ளார் என தெரிய வருகிறது.