கர்நாடக நலனுக்காக இணைவோம்

புதுடெல்லி செப்டம்பர் 20- கர்நாடக மாநிலத்தின் நலன் காக்க கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார். கர்நாடக மாநிலத்தின் நீர் நிலம் மொழி விவகாரத்தில் மாநில நலனைக் காக்க நாம் அனைவரும் கைகோர்ப்போம் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். காவேரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகத்தின
நலனைக் காக்க முதல்வர் சிதறாமையா டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி அதில் அவர் பேசினார் அப்போது அவர் கூறும் போது காவேரி நதிநீர் விவகாரத்தில் தற்போது கர்நாடக மாநிலத்திற்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடவில்லை என்று கூறவில்லை ஆனால் அதே சமயம் தமிழகத்திற்கு தண்ணீர் விட நம்மிடம் தண்ணீர் இல்லை. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கர்நாடகத்தில் பரவலாக மழை பெய்யாது ஆனால் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு நல்ல மழை பெய்யும் அங்கு அவர்களுக்கு நிலத்தடி நீரும் உள்ளது. நாம்தான் அதிக சிரமத்தில் இருக்கிறோம்
நமது சட்டக் குழுவும், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவும் காவிரி நீர் மேலாண்மைக் குழுவின் முன் மாநிலத்தின் உண்மை நிலையை திறம்பட முன்வைத்துள்ளனர். இதுகுறித்து மத்திய நீர்ப்பாசன அமைச்சருக்கு ஏற்கனவே இரண்டு முறை கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளோம். அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்துக்கு பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளோம் என்றார்.
காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அறிவியல் உண்மைகளின் அடிப்படையில் ஆலோசிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு 108.4 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும. 39.8 டிஎம்சி தண்ணீர் மட்டுமே பாக்கி உள்ளது. காரணம் தண்ணீர் இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம் என்றார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், மாநில நலன் என்று வரும்போது அரசியல் தேவையில்லை. இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரகலாத்ஜோஷி, ஷோபாகரந்த்லாஜே, பகவந்தகுபா, நாராயணசாமி, ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மாநிலத்தின் அனைத்து எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.