கர்நாடக பிஜேபியில் 20 எம்எல்ஏக்களுக்கு டிக்கெட் இல்லை

பெங்களூர் : ஜனவரி. 7 – எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களுக்கு இப்போதிலிருந்தே பெரும் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பி ஜே பி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , கட்சியின் தேசிய தலைவர் ஜெ பி நட்டா மாநிலத்திற்கு விஜயம் செய்ததின் பின்னணியில் வேட்பாளர்கள் பட்டியலை தயாரிப்பதில் மும்முரமாயிருப்பதுடன் தற்போதைய எம் எல் ஏக்களில் குறைந்தது 20 முதல் 25 பேருக்கு டிக்கெட் பறிபோவது நிச்சயம் என தெரிகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ஜெ பி நட்டா ஆகியோர் மாநிலத்திற்கு விஜயம் செய்தபோது மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் தயாரிப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தி முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனைகள் நடத்தியிருப்பதுடன் தேர்தலில் தோற்கும் வாய்ப்புகள் உள்ள தொகுதிகளில் தற்போதைய எம் எல் எங்களுக்கு டிக்கெட் பறிபோகும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை 16 மாவட்டங்களின் தற்போதைய 20 எம் எல் ஏக்களுக்கு டிக்கெட் புறக்கணிப்பதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பி ஜே பி மேலிடம் மாநிலத்தில் தனக்கே உரித்த இரண்டு மூன்று தேர்தல் வெற்றி வாய்ப்புக்கான ஆய்வுகளை நடத்தியுள்ள நிலையில் மாநிலத்தின் அனைத்து 224 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு குறித்த ஆய்வறிக்கையை மேலிடத்திற்கு தாக்கல் செய்துள்ளது. இந்த ஆய்வறிக்கைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள மேலிட தலைவர்கள் தற்போதைய எம் எல் ஏக்கள் தோற்கும் வாய்ப்புகள் உள்ள தொகுதிகளில் புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் அளிக்க முடிவு செய்திருப்பதுடன் அதன் படி இதுவரை 16 மாவட்டங்களின் 20 எம் எல் ஏக்கள் பட்டியலை தயாரித்து உள்ளதாக தெரிய வருவதுடன் இந்த தொகுதிகளில் வெற்றி பெரும் வாய்ப்புகள் உள்ள புதிய முகங்களை தேடும் பணியும் துவங்கியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் மீண்டும் அமித் ஷா மாநிலத்திற்கு வரவுள்ள நிலையி; அந்த நேரத்திலும் மீதமுள்ள மாவட்டங்களின் தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் நடத்தி தற்போதைய எம் எல் எக்களில் யார்யாருக்கெல்லாம் டிக்கெட் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உள்ளார். குடும்பத்திற்கு ஒரு டிக்கெட் , மற்றும் 75 வயதை தாண்டியவர்களுக்கு டிக்கெட் இல்லை என்ற நியமத்தை பின்பற்றி குஜராத்த் வெற்றியை மாதிரியாக கொண்டு புதிய முகங்களுக்கு டிக்கெட் அளிப்பது குறித்து அமித் ஷா , ஜெ பி நட்டா , மாநில கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைகள் நடத்தி வெற்றி பெரும் தற்போதைய எம் எல் ஏக்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்படும். தோற்கும் வாய்ப்புகள் உள்ள தொகுதிகளின் தற்போதைய எம் எல் ஏக்களை மாற்றி வெற்றி பெரும் வாய்ப்புகள் உள்ள புதிய முகங்களை நிறுத்தி இத்தகைய தொகுதிகளிலும் தாமரையை மலரச்செய்ய திட்டத்தை கட்சி மேலிடம் வகுத்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள்ளாக தற்போதைய எம் எல் ஏக்கள் யார் யாருக்கு டிக்கெட் உறுதி மற்றும் யார் யாருக்கு டிக்கெட் இல்லை என்பது தெரிந்து விடும்.