
பெங்களூர் ஆகஸ்ட் 21
பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சி பிஜேபி தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் ஹஸ்திரா ஆபரேஷனை தொடங்கியுள்ளது. காங்கிரஸ் வலையில் விட பல பிஜேபி தலைவர்கள் எம்எல்ஏக்கள் முடிவு செய்து இருப்பதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இது கர்நாடக பிஜேபியில் பூகம்பத்தை கிளப்பி உள்ளது தேசிய அளவிலும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது இந்த நிலையில் ப கட்சியை விட்டு காங்கிரசுக்கு ஓட இருக்கும் தலைவர்களை தடுக்க கர்நாடக பிஜேபி இன்று அதிரடி ஆலோசனை நடத்தியது கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் பெங்களூரில் இன்று நடந்தது. முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எடியூரப்பா கட்சியின் கர்நாடக மாநில தலைவர் நளின்குமார் கட்டில் முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா மூத்த தலைவர் கே எஸ் ஈஸ்வர ப்பா உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கடந்த முறை போல் இந்த முறையும் வெற்றி பெறுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது உத்தரவாத திட்டங்கள் மூலம் கர்நாடக மாநில மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவது குறித்து வியூகம் வகுக்கப்பட்டது. குறிப்பாக கர்நாடக மாநில பிஜேபியை பலவீனப்படுத்த ஆபரேஷன் அஸ்திராவை தொடங்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தக்க பதிலடி கொடுக்கவும் கட்சியை விட்டு காங்கிரசுக்கு ஓட உள்ள பிஜேபி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் ஆபரேஷன் ஸ்திராவுக்கு பதிலடியாக மீண்டும் ஆபரேஷன் கமலாவை தொடங்குவது குறித்தும் இதில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இப்போதே கர்நாடக மாநில அரசியல் சூடு பிடித்து உள்ளது. இதற்கிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க மத்திய புலனாய்வு அமைப்புகள் முடிவு செய்து இருப்பதாகவும் விரைவில் இதற்கான அறிகுறிகள் தெரியும் என்றும் டெல்லி வட்டாரம் தெரிவித்தது. விரைவில் கர்நாடக மாநில பிஜேபி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது அந்தந்த மாவட்ட அலுவலக கட்சி நிர்வாகிகள் கூட்டமும் நடத்தப்பட்டு கட்சிக்கு புத்துயிர் கொடுக்கவும் கட்சியை விட்டு மாற்றுக் கட்சிக்கு செல்ல இருக்கும் நபர்களை தடுக்கவும் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது என்று பிஜேபி வட்டாரம் தெரிவித்தது