கர்நாடக பிஜேபி தலைவர் குறித்து சித்தராமையா கடும் விமர்சனம்


பெங்களூர், ஏப். 8- முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக தினமும் கருத்து தெரிவித்து வரும் பிஜேபி எம்எல்ஏ பசவன கவுடா பாட்டில் எதனால், அமைச்சர் ஈஸ்வரப்பா, ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத மாநில பிஜேபி தலைவர் நளின்குமார் கட்டீல் ஒரு சாமர்த்தியமான தலைவரல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா,
முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக எம்எல்ஏ, அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அந்தக் கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீல், மற்ற கட்சிகள் மீது குறை கூற தகுதி கிடையாது. அவரின் கட்சி மீது நடவடிக்கை எடுக்க முடியாதவர் மற்ற கட்சிகள் பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது.
அவர் சாமர்த்தியமான தலைவர் இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடியூரப்பா, மீது தேசிய பிஜேபியின் அமைப்பு செயலாளர் சந்தோஷ் கூட, அமைச்சர் ஈஸ்வரப்பா எத்தனால் போல் சவாலாக இருந்து வருகிறார். நளின்குமார் கட்டீலால் யார் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் அவரால் எடுக்க முடியவில்லை என்று அதில் தெரிவித்துள்ளார்.